ராசியில்லாத இசை அமைப்பாளர்னு சொன்ன சிவாஜி பிலிம்ஸ்…? பாட்டால் பதில் சொன்ன எம்எஸ்வி

Published on: August 8, 2025
---Advertisement---

புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடம் பழகியதைப் போலவே நடிகர் திலகம் சிவாஜியுடனும் மிக நெருக்கமாகப் பழகியவர்தான் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன். அப்படி நெருக்கமான நட்பு இருந்த போதும் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்துல எம்எஸ்வி.யை ராசியில்லாத இசை அமைப்பாளர்னு தான் சொல்லிக் கொண்டு இருந்தாங்க.

நட்பு வேற, தொழில் வேற என்பதில் இருவரும் தெளிவாகவே இருந்தனர். அதனால் சிவாஜியின் அதுபோன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் எம்எஸ்.விஸ்வநாதன் எந்தக் காலத்திலும் கவலைப்பட்டதே இல்லை.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் புதிய பறவைக்கு இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. தன்னை அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் எப்படி விமர்சிக்கிறார்கள் என்பது பற்றி எம்எஸ்.விஸ்வநாதனுக்குத் தெரியும். என்றாலும், எந்தத் தயக்கமும் இல்லாமல் புதிய பறவை படத்துக்கு இசை அமைக்க அவர் ஒப்புக் கொண்டார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் நடிகர் திலகம் சிவாஜியோடு அவருக்கு இருந்த நட்புதான்.

புதிய பறவை படத்துக்குப் பிறகு சிவாஜி பிலிம்ஸின் எல்லா படங்களுக்கும் எம்எஸ்வி.தான்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு புதியபறவை படத்தில் எல்லாப் பாடல்களும் வெற்றிப் பாடல்களாக அமைந்தன. எம்எஸ்.விஸ்வநாதனைப் பொருத்தவரைக்கும் இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் தன்னோட பாட்டால் பதில் சொல்வதுதான் அவரது வழக்கம்.

1964ல் தாதா மிராசி இயக்கத்தில் சிவாஜி பிக்சர்ஸ் தயாரித்த படம் புதிய பறவை. சிவாஜி, சரோஜாதேவி, எம்ஆர்.ராதா, சௌகார் ஜானகி வி.கே.ராமசாமி, நாகேஷ், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.

எங்கே நிம்மதி, சிட்டுக் குருவி, ஆஹா மெல்ல நட, உன்னை ஒன்று கேட்பேன், பார்த்த ஞாபகம் ஆகிய பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தராசு, டாக்டர் சிவா, சிவந்த மண், வசந்த மாளிகை உள்பட சிவாஜி நடித்த பல படங்களில் இசை அமைப்பாளர் எம்எஸ்.விஸ்வநாதன்தான். இவற்றில் வசந்த மாளிகை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல்கள் எல்லாமே தேன் சொட்டும் ரகம். இந்தப படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியின் காரணமாக படம் ரீ ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment