தோள்ல இருந்து தானா துண்டு கீழே விழணும்.. யூனிட்டே ஆவலுடன் பார்க்க சிவாஜி செய்த மேஜிக்

மனோபாலாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு: மனோபாலாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு சிவாஜி கணேசனையும் சரோஜாதேவியையும் இயக்குகிற வாய்ப்பு. அதை பற்றி ஒரு பேட்டியில் மனோபாலாவே கூறியிருக்கிறார். பொதுவாகவே சிவாஜி வீட்டிற்கு அடிக்கடி போவதும் வருவதுமாகத்தான் மனோபாலா இருப்பாராம். அதனால் சிவாஜியுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. சிவாஜியை அப்பா என்றேதான் அழைப்பாராம் மனோபாலா.
சிவாஜிக்கும் விகேஆருக்கும் சீன்: பாரம்பரியம் படத்தில் சிவாஜி , சரோஜாதேவியுடன் விகே ராமசாமியும் நடித்ததனால் அப்பானு கூப்பிடுவதை விகே ராமசாமி கிண்டல் பண்ணுவாராம். என்னம்மோ கூட பொறந்தவன் மாதிரி அப்பா அப்பானு கூப்பிடுறனு கிண்டலடிப்பாராம் விகே.ராமசாமி. பார் மகளே பார் படத்திற்கு பிறகு விகே.ராமசாமிக்கும் சிவாஜிக்கும் இந்த பாரம்பரியம் படத்தில் டஃபான சீன் இருந்ததாம்.
கதையே கேட்காத சிவாஜி: பாரம்பரியம் என்ற கதை டி.கே.எஸ். சந்திரன் மேடையேற்றிய நாடகமாம்.எஸ்.எஸ். சந்திரன் அந்த நாடகத்தில் நடித்திருந்தாராம். அவர் கேரக்டரில் பாரம்பரியம் படத்தில் மலேசியா வாசுதேவன் நடித்தாராம். இப்படி பெரிய ஆளுமையுள்ள ஸ்கிரிப்ட்தான் பாரம்பரியம் படத்தின் கதை. அந்த நாடகம்தான் என சொன்னதும் சிவாஜி கதையே கேட்கவில்லையாம். ஆனால் கதைக்கு ஏற்ப ஜோடி சரோஜாதேவியை போடவேண்டும் என ஆசைப்பட்டாராம் சிவாஜி.
சிவாஜியை விட முக்கியம்:மனோபாலாவை பொறுத்தவரைக்கும் சிவாஜியை இயக்குவதையும் தாண்டி சாந்தி தியேட்டரில் அவருடைய பெயர் வரவேண்டும் என்பதுதானாம். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான மிகப்பெரிய சந்தர்ப்பம்தான் இந்த பாரம்பரியம் திரைப்படம் என மனோபாலா கூறினார். சிவாஜி என்றாலே டைம் மேனேஜ்மெண்ட்தான். அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே ஃபுல் மேக்கப்புடன் வந்து விடுவார் என்பதுதான்.
சிவாஜியின் மேஜிக்: இந்த பாரம்பரியம் படத்தில் ஒரு காட்சி. சிவாஜி தோளில் இருந்து தானாக துண்டு டார்கெட் இடத்தில் விழ வேண்டும். என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் எப்படி தானாக துண்டு விழும் என யூனிட்டே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களாம். சரியாக அந்த இடம் வந்ததும் சிவாஜி தோளில் இருந்து துண்டு விழுந்ததாம். இருந்த அனைவரும் கைத்தட்டினார்களாம்.
பின் தனியாக மனோபாலா சிவாஜியிடம் எப்படிப்பா விழ வச்சீங்க என கேட்க முன்பக்கம் தொங்கும் துண்டுக்கு பின்னாடி என் கையை வைத்து பிடித்து இழுத்தேன் என கூறியிருக்கிறார். ஆனால் ஷாட்டுக்கு போவதற்கு முன் லென்ஸ் எது வரைக்கும் என கேட்டுவிட்டுதான் போவாராம். மார்பு அளவு என்று சொன்னதும் அது வரைக்கும் நடிப்பாராம். அதற்கு கீழ் என்ன செய்தாலும் தெரியாது.அப்படிதான் இந்த காட்சியை நடித்துக் கொடுத்தாராம் சிவாஜி.