Categories: latest news

ரஜினிக்காக நான் விட்டுக்கொடுக்கல… அப்படி சொல்லவே சொல்லாதீங்க… புலம்பிய நடிகர்!

பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் சிவக்குமார் ரஜினியுடன் நடித்த திரையுலக அனுபவங்களை பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஆரம்பத்துல கொடூரமான வில்லனா நடிச்சி ஹீரோவா இந்தளவு உயர்ந்துருக்காருன்னா அது ஒரே ஆளு ரஜினிகாந்த் தான். பதினாறு வயதினிலே படத்துல கொடூரமான வில்லனா ரஜினி நடிச்சிருப்பாரு. கடைசி கிளைமேக்ஸ்ல ஸ்ரீதேவியைக் கெடுப்பாரு. ஆனா அதைக் காட்ட மாட்டாங்க. கமல் டேய் விடுறா விடுறான்னு கத்துவாரு. அதைத்தான் காட்டுவாங்க. ஆனாலும் தலைவா பரட்டைன்னு ஆடியன்ஸ் கத்துறாங்க. அதெல்லாம் ரொம்ப ரேர். அது கடவுளோட கருணைதான்.

‘புவனா ஒரு கேள்விக்குறி படத்துல நான் விட்டுக் கொடுத்துட்டேன்னு சொல்றாங்க. அதெல்லாம் கிடையாது. தாயின் கருவறையில் இருக்கும்போதே மண்டையில எல்லாத்தையும் எப்படி வரணும்னு எழுதிடுறான். ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாரா ஆகணும்னு இருக்கும்போது சிவக்குமார் எப்படி வர முடியும்? பதினாறு வயதினிலே படத்தில் படம் முழுக்க கமல் ஹீரோவா வருவாரு.

கடைசி வரை ரஜினியைத் தடுக்க முடியல. சிவக்குமார் தடுத்துடுவாரா? படத்தோட கதையே என்னன்னா வில்லனைப் போல் தோற்றம் உள்ள நல்லவன். நல்லவன் போல் தோற்றம் உள்ள வில்லன். நான் தான் வில்லனா இருப்பேன். அது ஒர்க் அவுட்டாச்சு. விட்டுக் கொடுத்தேன்னு சொல்லவே சொல்லாதீங்க…’ என்கிறார் சிவக்குமார்.

1977ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவக்குமார், சுமித்ரா. ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்த படம் புவனா ஒரு கேள்விக்குறி. இந்தப் படத்தின் கதையை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். இளையராஜா இசை அமைத்துள்ளார். விழியிலே மலர்ந்தது, ராஜா என்பார் மந்திரி, பூந்தென்றலே நல்ல நேரம் ஆகிய பாடல்கள் உள்ளன.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டு இருந்த சிவக்குமார் இந்தப் படத்தில் வில்லனாக நடித்தது பலரையும் வியக்க வைத்தது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago