கமல், ரஜினி இருவரில் யாருடன் நடித்தது நல்ல அனுபவம்? ஸ்ரீதேவி சொன்ன பதில் இதுதான்..!

by sankaran v |
கமல், ரஜினி இருவரில் யாருடன் நடித்தது நல்ல அனுபவம்? ஸ்ரீதேவி சொன்ன பதில் இதுதான்..!
X

கமல், ரஜினி குறித்து பல தகவல்களை நடிகை ஸ்ரீதேவி ஒருமுறை பகிர்ந்துள்ளார். அவரிடம் நடிகை சுஹாசினி பேட்டி எடுக்கிறார். என்னென்ன சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்னு பாருங்க.

கமல் உடன் குரு, கல்யாணராமன், சிகப்பு ரோஜாக்கள், மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம் ஆகிய படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். இருவருக்கும் உள்ள அந்த கெமிஸ்ட்ரி, அண்டர்ஸ்டேண்டிங், கமல், ஸ்ரீதேவி மாதிரி ஜோடி உலகத்துலயே இல்லன்னு நினைக்கிறேன்.

தமிழ் மக்களுக்கு அந்த ஜோடி ரொம்ப ஸ்பெஷல். அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு ஆங்கராக வந்துள்ள சுஹாசினி கேட்கிறாங்க. அதுக்கு ஸ்ரீதேவி, மூன்றாம்பிறை ரொம்ப நல்ல படம். மனசில நிக்கிற மாதிரியான கேரக்டர்.

நிரூபிச்ச கமல்: அது எப்படியோ நல்ல படமா அமைஞ்சிடுச்சு. வழக்கமா சொல்வாங்க. குழந்தை நட்சத்திரம் அவ்வளவு வெற்றியைக் கொடுக்க மாட்டாங்கன்னு. ஆனா அவரு நிரூபிச்சாரு. ஆஃப் ஸ்கிரீன்ல நாங்க அவ்வளவா பேசிக்க மாட்டோம். ஆனா ஸ்க்ரீன்ல அந்த கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லாருக்கும் என்று சொல்கிறார்.

அதே போல ரஜினியைப் பற்றி சுஹாசினி ஸ்ரீதேவியிடம் கருத்து கேட்கிறார். கமல் உங்களை எவ்வளவு கிண்டல் பண்ணுவாரோ அதுக்கு ஆப்போசிட் ரஜினி. உங்களுக்க அவ்ளோ மரியாதை கொடுப்பாரு. அவரோட குடும்ப நிகழ்ச்சின்னா முதல்ல உங்களுக்குத் தான் அழைப்பு தருவார்.

ரஜினி: நீங்க ரஜினியோட இணைந்து நடித்த காயத்ரி, பிரியா, தர்மயுத்தம், ஜானி, தனிக்காட்டுராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை இத்தனை படங்கள் இருக்கு. அவரு கூட நடிச்ச அனுபவம் எப்படி?

நீங்க கூட சொல்லிருக்கீங்க. கமல், ரஜினி கூட நடிச்சா ரொம்ப பாதுகாப்பா போயி நடிச்சிட்டு வரலாம்னு சொல்றாரு. வீட்ல ஒருத்தர்கூட இருக்குற மாதிரி இருக்குன்னு சொல்லிருக்காங்க. ரஜினி பற்றி சொல்லுங்கன்னு சுஹாசினி கேட்கிறார்.

ரொம்ப நல்ல குணங்கள்: அவரு ஜாஸ்தியா பேச மாட்டாரு. அப்படியே சிரிச்சிக்கிட்டே இருப்பாரு. ஒரு சாதாரண சீனைக் கூட இன்ட்ரஸ்ட் வர்ற மாதிரி எல்லாரும் சிரிக்கிற மாதிரி என்ஜாய் பண்ற மாதிரி பண்ணிடுவாரு. பல படங்கள் பண்ணிருக்கேன். அவருக்கிட்ட இருந்து விஷயங்கள் கத்துருக்கேன். ரொம்ப அமைதியா இருக்குறது. யாருக்கிட்டேயும் ஜாஸ்தியா பேசுறது கிடையாது. இதெல்லாம் ரொம்ப நல்ல குணங்கள் என்கிறார் ஸ்ரீதேவி.

Next Story