உள்ளத்தை அள்ளித்தா பட வாய்ப்பு சுந்தர்.சி.க்கு வந்தது இப்படித்தானா? பெரிய தில்லாலங்கடியா இருப்பாரோ?

Published on: March 18, 2025
---Advertisement---

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்தும், இயக்குனர் சுந்தர்.சி. பற்றியும் சில சுவாரசியமான தகவல்களை மூத்த பத்திரிகையாளர் சபையர் சொல்கிறார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

படத்துக்காக விரதம்: மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படத்துவக்க விழா சமீபத்தில் நடந்தது. ஆர்ஜே.பாலாஜிக்குப் பதிலாக சுந்தர்.சி. இயக்க உள்ளார். நயன்தாரா இந்தப் படத்துக்காக விரதம் இருந்தாராம். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொல்றாரு. அது கதையின் மீது உள்ள நம்பிக்கையால் கூட இருக்கலாம்.

கேஆர்.விஜயாவும் அந்தக் காலத்தில் விரதம் இருந்தாங்க. இது சினிமாவில நடைமுறை. மீனாவும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாங்க. குஷ்பூவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

திரைக்கதைக்கு முக்கியத்துவம்: சுந்தர்.சி.யைப் பொருத்தவரைக்கும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பாரு. படத்தை எங்கிருந்து பார்த்தாலும் புரியும். அந்தவகையில் அவரது படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை தான். முதல் 2 படங்கள் சுமாராகத்தான் போனது. உள்ளத்தை அள்ளித்தா படம்தான் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தது.

அந்த வாய்ப்பு கிடைச்சதே சுவாரசியமான விஷயம். அந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஜாதகத்து மேல பெரிய நம்பிக்கையைக் கொண்டவர். அவர் டைரக்டரோட ஜாதகத்தைப் பார்த்துத் தான் அவரை ஒத்துக்குவாராம்.

பக்காவா ஜாதகம் ரெடி: இந்த விஷயம் சுந்தர்.சி.க்குத் தெரியுது. உடனே அவர் நல்ல ஜோசியரைப் பார்த்து பக்காவா ஒரு ஜாதகத்தை ரெடி பண்ணிருக்காரு. அதைக் கொண்டு போய் அந்தத் தயாரிப்பாளர்கிட்ட கொடுத்துருக்காரு. அப்படித்தான் அவருக்கு அந்தப் படத்தோட வாய்ப்பு கிடைச்சது. இதை அவரே பல மேடைகளில் சொல்லிருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி. இயக்கிய முதல் படம் முறை மாமன். அடுத்த படம் முறை மாப்பிள்ளை. முறை மாமனில் ஜெயராம், குஷ்பு ஆகியோர் நடித்து இருந்தனர். படம் பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. முறை மாப்பிள்ளை படத்தில் அருண்குமார் நடித்து இருந்தார். இதுவும் ரீச் ஆகவில்லை. இந்த இரு படங்களும் 1995ல் வெளியானது. அடுத்ததாக 1996ல் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி ஆகிய படங்களை இயக்கினார்.

உள்ளத்தை அள்ளித் தா: இவற்றில் உள்ளத்தை அள்ளித் தா படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கார்த்திக், ரம்பா, கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் ரகுராம், என்.விஷ்ணுராம், என்.ஜோதிலட்சுமி, என்.பிரபாவதி ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. சிற்பியின் இசையில் பாடல்கள் தெறிக்க விட்டன. படம் முழுக்க பக்கா காமெடி கலந்த கமர்ஷியல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment