என் படத்தை அப்படியே விட்டுட்டு போயிட்டார் சுந்தர்.சி.!.. புலம்பும் அருண் விஜய்!...

by சிவா |
என் படத்தை அப்படியே விட்டுட்டு போயிட்டார் சுந்தர்.சி.!.. புலம்பும் அருண் விஜய்!...
X

Arun Vijay: தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களிலும் குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜயகுமார். நடிகை லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அதற்கு முன்பு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமும் ஆகியிருந்தது. அப்படி விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் அருண் விஜய்.

அப்பாவை போல நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்தவர். இவர் அறிமுகமான முதல் திரைப்படம் முறை மாப்பிள்ளை. இந்த படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. அதன்பின் அருண் விஜய் பல படங்களிலும் நடித்தார். நன்றாக நடிப்பதோடு, நடனம், ஃபைட் என எல்லாவற்றையும் செய்யும் திறமை கொண்டவராக இருந்தாலும் அவரால் நிலையான ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை.

எனவே, அவரால் முன்னணி நடிகராக மாற முடியவில்லை. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து நடித்து வந்தார். மகிழ் திருமேனியின் தடையற தாக்க படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தது அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அஜித் ரசிகர்களும் அவரை கொண்டாட துவங்கினார்கள். அதன்பின் தடம், குற்றம் 23 உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்தார். மேலும், சாகோ உள்ளிட்ட சில பேன் இண்டியா படங்களிலும் நடித்தார். அவர் நடித்ததில் சில படங்கள் பாதியிலே நின்றது. ஆனாலும், நம்பிக்கையோடு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

பாலாவின் இயக்கத்தில் உருவான வணங்கான் படத்திலும் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்திருக்கிறார். பொங்கலுக்கு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், தன்னுடைய முதல் படத்தில் சுந்தர்.சி நடந்துகொண்டது பற்றி முதன் முறையாக பேசியிருக்கிறார் அருண் விஜய்.

என் முதல் படமான முறை மாப்பிள்ளையை இயக்கினது சுந்தர்.சி சார்தான். அவர் இல்லையெனில் நான் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது. ஆனால், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் படம் முடியும் சமயத்தில் விட்டுட்டு போயிட்டார். அதன்பின் மணிவண்ணன் சார்தான் படத்தை முடித்து கொடுத்தார்’ என சொல்லியிருக்கிறார். சுந்தர்.சி. பல பேட்டிகளில் பல விஷயங்களை சொல்லியிருந்தாலும் இந்த படம் பற்றி எங்கேயும் அவர் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story