Categories: latest news

கட்டுனா இப்படி ஒரு பொண்ணு!. சுந்தர்.சி போட்ட சபதம்!.. அட அது நடந்துடுச்சே!….

Sundar C: மணிவண்ணனிடம் உதவியாளராக வேலை செய்து சினிமாவை கற்றுக்கொண்டவர் சுந்தர் சி. முறைமாமன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். காதல், குடும்ப செண்டிமெண்ட், காமெடி கலந்த கலவையாக குடும்பத்துடன் எல்லோருக்கும் பார்க்கும் படி திரைப்படம் எடுப்பது இவரின் ஸ்டைல்.

காமெடி திரைப்படம்: கார்த்திக், கவுண்டமணி, மணிவண்ணன், ரம்பாவை வைத்து அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த காமெடி காட்சிகள் இப்போதும் பலராலும் ரசிக்கப்படுகிறது. சுந்தர் சி படம் என்றாலே நம்பி போய் சிரித்துவிட்டு வரலாம் என்கிற இமேஜை அப்படம் உருவாக்கியது.

உள்ளத்தை அள்ளித்தா: இந்த படத்தின் வெற்றிதான் ரம்பா முன்னணி நடிகையாவதற்கும், கார்த்திக் 2வது ரவுண்டு வருவதற்கும் உதவியாக இருந்தது. 1958ம் வருடம் சிவாஜி – சந்திரபாபு நடித்து வெளியான சபாஷ் மீனா படத்தைத்தான் கொஞ்சம் மாற்றி உள்ளத்தை அள்ளித்தா படமாக எடுத்தார் சுந்தர்.சி ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களை காப்பி அடிப்பது என்பதை சுந்தர் சி பல வருடங்களாக செய்து வருகிறார்.

ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் அன்பே சிவம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். இதில், தலைநகரம், அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகியவை அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.

மதகஜ ராஜா: இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதோடு, 12 வருடங்களுக்கு விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோரை வைத்து அவர் இயக்கிய மத கஜ ராஜா படம் இப்போது பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. பொங்கலுக்கு வெளியான படங்களில் இதுவே அதிக வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.

முதல் படமான முறை மாமன் படத்தை இயக்கும்போதே குஷ்புவிடம் காதலை சொல்லி அவரை திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர்.சி ‘குஷ்புவின் முதல் படம் வருஷம் 16ரிலீஸ் ஆனபோது நான் கோவையில் வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த படத்தை பார்த்துவிட்டு என் நண்பனிடம் ‘கல்யாணம் பண்ணா இப்படி ஒரு பொண்ணதான் கட்டுவேன்’ என சொன்னேன். பல வருடம் கழித்து அதுவும் நடந்துவிட்டது’ என சொல்லியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago