கமல் ஸ்ரீதேவி ஜோடி ஹிட்டானதுக்கு காரணம்.. இதுதான் வொர்க் அவுட் ஆச்சா?

by ராம் சுதன் |
கமல் ஸ்ரீதேவி ஜோடி ஹிட்டானதுக்கு காரணம்.. இதுதான் வொர்க் அவுட் ஆச்சா?
X

சினிமாவில் ராணி: சென்னை முன்பு மெட்ராஸாக இருக்கும் போது அனைவரும் ஒரு ராணியாக பார்த்தது ஸ்ரீதேவியைத்தான். 1967 ஆம் ஆண்டு குட்டி முருகனாக குழந்தை நட்சத்திரமாக படத்தில் அறிமுகமானார் ஸ்ரீதேவி. அதை போல நம்நாடு படத்தில் எம்ஜிஆருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இவருடன் சேர்ந்து குட்டிபத்மினியும் நடித்திருப்பார். அந்தப் படம் என்று சொன்னாலே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே பாடல்தான் நினைவுக்கு வரும்.

குழந்தை நட்சத்திரமாக வெற்றியடைந்த ஸ்ரீதேவி: அந்தப் படத்தின் போது படப்பிடிப்புக்கு வந்ததுமே எம்ஜிஆர் முதல் வேலையாக ஸ்ரீதேவிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுப்பது வழக்கமாம். குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோயினாக முதன் முதலில் தமிழில் அறிமுகமானது மூன்று முடிச்சு திரைப்படத்தில்தான். ஆனால் ஹீரோயினாக தெலுங்கில்தான் முதன் முதலாக அறிமுகமாகியிருக்கிறார் ஸ்ரீதேவி.

ஹீரோயினாக அறிமுகம்: மூன்று முடிச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமான போது ஸ்ரீதேவிக்கு 13 வயதுதானாம். அந்தப் படத்தில் ரஜினிக்கு அப்பாவையே திருமணம் செய்து கொண்டு ரஜினியையே பழிவாங்கும் கதாபாத்திரத்தில் அந்த சிறு வயதில் நடித்திருப்பார் ஸ்ரீதேவி. இந்தப் படத்தை பாலசந்தர்தான் இயக்கியிருந்தார். மேலும் படத்தில் கமலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார்.

கமலை பார்த்து ஆச்சரியம்: பாலசந்தருக்கு ஸ்ரீதேவி என்றால் மிகவும் பிடிக்குமாம். அந்தப் படத்தில் நடிக்கும் போது ரஜினி மற்றும் ஸ்ரீதேவி புதுவரவாகத்தான் இருந்தார்கள். ஆனால் கமல் ஏற்கனவே ஒரு பெரிய ஸ்டாராக இருந்திருக்கிறார். அதனால் கமலை பார்த்து ரஜினியும் ஸ்ரீதேவியும் ‘பாருங்க.. எவ்ளோ பெரிய ஆக்டர்? எப்படி இவர மாதிரி நாம பெரிய ஆளாக வரப் போகிறோம்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்களாம்.

ரஜினி கொடுத்த மரியாதை: ரஜினி மற்றும் கமலுடன் தான் ஸ்ரீதேவி அதிக படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். இதனாலேயே இவர்களுக்குள் ஆழமான ஒரு நட்பு இருந்தது . ஆனால் கமல்தான் எப்பொழுதும் ஸ்ரீதேவியை கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பாராம். ஆனால் ரஜினி ஸ்ரீதேவிக்கு என ஒரு தனி மரியாதை கொடுப்பாராம். அதுமட்டுமில்லாமல் ரஜினி , கமல் படங்கள் என்றாலே தைரியமாக வரலாம்.

அந்தளவுக்கு இருவரும் பாதுகாப்பாக நடத்துவார்கள் என்று ஸ்ரீதேவி கூறியிருக்கிறார். கமலுடன் இணைந்து குரு, கல்யாண ராமன், சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், போன்ற பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. சினிமா துறையிலேயே கமல் ஸ்ரீதேவி ஜோடியைத்தான் அனைவரும் விரும்பினார்கள். மக்களிடமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

சூப்பர் ஹிட் ஜோடியாக கமல் ஸ்ரீதேவி விளங்கினார்கள். அதற்கு என்ன காரணம் என ஸ்ரீதேவியிடம் கேட்ட போது ஷாட் முடிந்ததும் ஆஃப் ஸ்க்ரீனில் நாங்கள் பேசிக் கொள்ளவே மாட்டோம். ஒரு வேளை அதுவாகக் கூட இருக்கலாம் என ஸ்ரீதேவி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Next Story