எம்ஜிஆர் நடிப்பில் இத்தனை ரீமேக் படங்களா? எல்லாமே சூப்பர்ஹிட்டால்ல இருக்கு...!

60களில் எம்ஜிஆர் நடிப்பில் பல சூப்பர்ஹிட் படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ரீமேக்காக உள்ளன. ஆனால் பார்க்கும்போது அந்த சாயல் கொஞ்சம்கூட தெரியாது. ஏன்னா ரீமேக்கின் அசல் படங்களை விட எம்ஜிஆர் படங்கள் தான் நச்சென்று இருக்கும். என்னென்னன்னு பார்க்கலாமா...
மாட்டுக்கார வேலன்: எம்மே தமன்னா என்ற ராஜ்குமார் நடித்த கன்னடப்படத்தை ரீமேக் செய்துள்ளார்கள். அதுதான் எம்ஜிஆர் நடித்த மாட்டுக்கார வேலன் என்ற படமாக 1970ல் வெளியானது. அடுத்து 1970ல் பாலு பலகதே என்ற ராஜ்குமார் நடித்த கன்னடப்படம் எம்ஜிஆரின் நடிப்பில் ஊருக்கு உழைப்பவன் என்ற பெயரில் 1976ல் வெளியானது. அடுத்து 1970ல் சச்சா ஜூத்தா என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து 1975ல் எம்ஜிஆரின் நடிப்பில் நினைத்ததை முடிப்பவன் என்ற பெயரில் வெளியானது.
நீதிக்குத் தலைவணங்கு: 1973ல் நடிகர் கிருஷ்ணா நடித்த நேரமு சிக்ஷா என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து 1976ல் எம்ஜிஆர் நடிப்பில் நீதிக்குத் தலைவணங்கு என்ற பெயரில் வெளியானது. 1957ல் நடிகர் சாந்தாராம் நடித்த தோ ஆன்கேன் பாரா ஹாத் என்ற இந்திப் படத்தை ரீமேக் செய்து 1975ல் எம்ஜிஆர் நடிக்க பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் வெளியானது.
1973ல் அமிதாப்பச்சன் நடித்த சஞ்சீர் என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து 1974ல் எம்ஜிஆர் சிரித்து வாழ வேண்டும் என்ற பெயரில் நடித்தார். 1973ல் தர்மேந்திரா நடித்த யாதோங்கி பாரத் என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து எம்ஜிஆர் 1975ல் நாளை நமதே என்ற படத்தில் நடித்தார்.
நம் நாடு: 1969ல் என்டி.ராமராவ் நடித்த கதாநாயகுடு என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து அதே ஆண்டில் நம் நாடு என்ற பெயரில் நடித்தார் எம்ஜிஆர். 1962ல் ஷமிகபூர் நடித்த சைனா டவுன் என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து 1968ல் குடியிருந்த கோயில் என்ற படத்தில் எம்ஜிஆர் நடித்தார்.
1966ல் தர்மேந்திரா நடித்தா பூல் ஆர் பத்தார் என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து 1968ல் ஒளிவிளக்கு என்ற படத்தில் எம்ஜிஆர் நடித்தார். 1969ல் ராஜ்குமார் நடித்த கண்டோன்டு ஹென்னாரு என்ற கன்னடப்படத்தை 1972ல் ராமன் தேடிய சீதை படத்தில் நடித்தார் எம்ஜிஆர்.
1971ல் நடிகர் ராஜேஷ் கண்ணா நடித்த ஹாத்தி மேரே சாத்தி என்ற இந்திப்படத்தை ரீமேக் செய்து 1972ல் நல்ல நேரம் என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்தார். 1953ல் அக்கினேனே நாகேஸ்வரராவ் நடித்த பிரதுக்கு தெருவு என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து 1972ல் நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் நடித்தார் எம்ஜிஆர்.
அன்பே வா: 1961ல் ராக் கட்சன் நடித்த கம் செப்டம்பர் என்ற ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்து 1966ல் அன்பே வா என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்தார். 1967ல் நடிகர் உத்தம்குமார் நடித்த ஜிபான் ம்ரித்யு என்ற பெங்காலி படத்தை ரீமேக் செய்து 1972ல் சங்கே முழங்கு என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்தார்.
1967ல் நடிகர் ராஜ்குமார் நடித்த பீடி பசவன்னா என்ற கன்னடப்படத்தை ரீமேக் செய்து 1970ல் தேடி வந்த மாப்பிள்ளை என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்தார். 1967ல் நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவ் நடித்த பூல ரங்காடு என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து 1970ல் என் அண்ணன் என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்தார். 1965ல் ராஜேந்திரகுமார் நடித்த ஆயி மிலன் கி பேல என்ற இந்திப் படத்தை ரீமேக் செய்து 1971ல் ஒரு தாய் மக்கள் என்ற படத்தில் எம்ஜிஆர் நடித்தார்.
அலிபாபாவும் 40திருடர்களும்: 1965ல் மனோஜ்குமார் நடித்த ஹிமாலயி கி கோட்மின் என்ற இந்திப் படத்தை ரீமேக் செய்து 1968ல் புதிய பூமி என்ற படத்தில் எம்ஜிஆர் நடித்தார். 1954ல் நடிகர் மயிபால் நடித்த அலிபாபா ஆர் 4 சார் என்ற இந்திப் படத்தை ரீமேக் செய்து எம்ஜிஆர் 1956ல் அலிபாபாவும் 40திருடர்களும் என்ற படத்தில் நடித்தார்.
1956ல் தேவ் ஆனந்த் நடித்த பாக்கெட் மார் என்ற இந்திப் படத்தை ரீமேக் செய்து 1961ல் எம்ஜிஆர் திருடாதே என்ற படத்தில் நடித்தார். 1964ல் என்டி.ராமராவ் நடித்த ராமுடு பீமுடு என்ற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து 1965ல் எங்க வீட்டுப் பிள்ளை என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்தார்.
பாக்தாத் திருடன்: 1924ல் தக்லஸ் நடித்த தி தீஃப் ஆஃப் பாக்தாத் என்ற ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்து 1960ல் பாக்தாத் திருடன் என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்தார். 1924ல் சார்லி சாப்ளின் நடித்த தி கிட் என்ற ஹாலிவுட் படத்தின் கதையும் 1966ல் பெற்றால்தான் பிள்ளையா என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்த படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருந்தது. 1934ல் கிளர்க் கேபிள் நடித்த இட் ஹேப்பன்டு ஒன் நைட் என்ற ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்து 1966ல் சந்திரோதயம் என்று எம்ஜிஆர் நடித்தார்.