கிடைக்காம இருக்குறது நல்லது... கிடைக்காம இருக்குற வரைக்கும் பெட்டர்! சூப்பர்ஸ்டார் சொன்ன ரகசியம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஒருமுறை நடிகர் விவேக் தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றுக்காக பேட்டி எடுத்தார். அப்போது ரஜினியிடம் விவேக் பேட்டி காண்கிறார். 'சூப்பர்ஸ்டாரா இப்போ சந்தோஷமா இருக்கீங்களா?'ன்னு ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ரஜினி சொன்ன பதில் இதுதான்.
சந்தோஷம்கறது நாம தேடுற பொருள்லயோ, வாங்குறதுலயோ இல்ல. அது உள்ளே இருந்து வரணும். ஆண்டவன் யார் யாரை சோதிக்கணும், தண்டிக்கணும்னா அவன் கேட்குறதை எல்லாம் கொடுத்துருவான். அவன் கேட்குறதை எல்லாம் கொடுத்துட்டா அவனுக்கு வரும்னு தெரிஞ்சிடும்.
பெட்டர்: அது வந்து தண்டனை. கிடைக்காம இருக்குற வரைக்கும்தான் இன்ட்ரஸ்ட் எல்லாமே இருக்கும். கிடைச்சிடுச்சுன்னா அந்த ஆர்வம் போயிடும். சிலது வந்து கிடைக்காம இருக்குற வரைக்கும் நல்லது. சிலது கிடைக்காம இருக்குற வரைக்கும் பெட்டர் என்று ரஜினி சொல்லிவிட்டு அவருக்கே உரித்தான சிரிப்பை சிரித்தார். அப்போது விவேக்கும் சிரித்தபடி அது புரிஞ்சவங்களுக்குப் புரியட்டும்னு சொல்லி விட்டார்.
எமோஷனல் கேரக்டர்: பாட்ஷா படம் ஜெயித்ததுக்கு என்ன காரணம்னா அந்தக் கேரக்டர். அதுல இருக்குற ஆக்ஷன். அதோடு சேர்ந்து ஸ்டைலும் பொருந்தும்போது அது வேற லெவல் ஆகிடுது. அந்தப் படத்துல அவ்ளோ எமோஷனல் அந்தக் கேரக்டர் உள்வாங்கி இருக்கும். அவ்ளோ உணர்வையும் உள்ள வச்சிக்கிட்டு மற்றவங்களுக்காக எல்லாம் பண்ணும்போது அது பெரிய அளவில் ரீச்சாயிடுது என்ற ரஜினியிடம் பாட்ஷா 2 வருமான்னு கேட்டதுக்கு அதை டச் பண்ணக்கூடாது.
எங்க வீட்டுப்பிள்ளை: ஓல்டு இஸ் கோல்டு. பாட்ஷால எமோஷன் இருக்கு. சுஜாதா கூட சொல்லிருந்தாங்க. ஸ்கிரிப்ட்லயே பெஸ்ட் இதுன்னு சொல்கிறார் ரஜினி. 'அதே மாதிரி இன்னொரு மேஜிக் நடக்க முடியலையே'ன்னு விவேக் கேட்டப்ப, 'எம்ஜிஆர் சார் எவ்ளோவோ படங்கள் பண்ணிருக்காங்க. எங்க வீட்டுப்பிள்ளை படத்துல வர்ற அந்த கிக் மற்ற படங்கள்ல இல்லையே. அப்படித்தான் இதுவும். அதுவந்து ஆக்ஷன் ஹீரோ'. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.