Categories: latest news

இந்த படம் ஓடாது!. பாக்கியராஜ் முகத்துக்கு நேரா சொன்ன இயக்குனர்!.. ஒரு பிளாஷ்பேக்!…

Bhagyaraj: பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர் கே.பாக்கியராஜ். கதை, வசனம், திரைக்கதை, இயக்கம் ஆகிவற்றில் மட்டுமே ஆர்வமுடன் இருந்த பாக்கியராஜை புதிய வார்ப்புகள் படம் மூலம் நடிகராக மாற்றினார் பாரதிராஜா. அதன்பின் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்த பாரதிராஜா ஒரு கட்டத்தில் தான் இயக்கும் படங்களில் தானே ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

தன்னுடைய பலம் எது, பலவீனம் எது என தெரிந்து அதற்கு ஏற்றார் போல கதை, திரைக்கதையை எழுதி நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர். தன்னுடைய உருவம் மற்றும் சுபாவத்திற்கு ஏற்றார் போல படங்களை எடுத்து வெற்றி பெற்றவர். குறிப்பாக அப்பாவி கணவனாக பல படங்களிலும் நடித்து பெண்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேட்னி ஷோ என சொல்லப்படும் மதிய காட்சிக்கு பெண்கள் அதிக அளவில் போனதற்கு காரணம் பாக்கியராஜின் படங்கள்தான். அதுவும் பாக்கியராஜின் படங்களுக்கு பல பெண்கள் ரிப்பீட் ஆடியன்ஸாக இருந்தார்கள். எல்லா படங்களிலும் ஒன்றுமே தெரியாத இன்னசண்ட் கதாபாத்திரத்திலேயே நடித்தார் பாக்கியராஜ்.

அந்த ஏழு நாட்கள், தாவணி கனவுகள், முந்தானை முடிச்சி என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். பாரதிராஜாவின் பட படங்களுக்கே திரைக்கதை அமைப்பதில் பங்காற்றியவர் இவர். இவர் இயக்கிய படங்கள் சின்ன வீடும் ஒன்று. மனைவி குண்டாக இருப்பதால் வேறொரு பெண்ணை தேடி செல்லும் கதாபாத்திரத்தில் பாக்கியராஜ் நடித்திருந்தார்.

தான் நாடி சென்ற பெண் கெட்டவள் என்பது தெரிந்தபின் திருந்தி தனது மனைவியே உலகம் என அவர் திரும்பி வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படம் பற்றி இயக்குனர் வி.சேகர் ஊடகம் ஒன்றில் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

சின்ன வீடு படம் ரிலீஸாவதற்கு முன்பு பலருக்கும் படத்தை போட்டு காட்டினார் பாக்கியராஜ். படம் பார்த்த நான் அவரிடம் ‘உங்களுடைய எல்லா படங்களும் சிறப்பாக இருக்கும். ஆனால், இந்த படம் ஓடாது. ஏனெனில், மனைவி தவறான பெண்ணாக இருந்து ஒருவன் தடம் மாறிப்போனால் ஓகே. ஆனால், குண்டாக இருக்கும் ஒரே காரணத்திற்காக ஒருவன் இப்படி செய்வதை பெண்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என கூறினேன். அவரை சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது எம்.ஜி.ஆரின் வாரிசு என அவர் பேசப்பட்ட நேரம். எல்லோரும் என்னை திட்டினார்கள்.

அடுத்தநாள் என் வீட்டுக்கு ஒரு கார் வந்தது. பாக்கியராஜ் உங்களை கூப்பிட்டு வர சொன்னார் என சொன்னார்கள். என் மனைவியோ ‘உங்களுக்கு எதற்கு தேவையில்லாத வேலை?. படம் பார்த்துவிட்டு கம்முனு வர வேண்டியதுதானே’ என திட்டினார். ‘சரி காரை அனுப்பி வர சொல்லி என்னை கொலையா செய்துவிடுவார்கள்?’ என சொல்லிவிட்டு போனேன். என்னைப் பார்த்த அவர் ‘என்னிடம் வேலை செய்கிறாயா?’ எனக்கேட்டார். அதன்பின் அவருடன் சில படங்களில் வேலை செய்தேன்’ என சொல்லியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

25 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

2 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

2 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

2 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

5 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago