Categories: latest news

தளபதி படத்தால் வந்த நஷ்டம்!.. ரஜினியிடம் அழுத வினியோகஸ்தர்!.. ஒரு பிளாஷ்பேக்!…

Rajini Thalapthy: ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் தளபதி முக்கியமான திரைப்படமாகும். ஏனெனில் வழக்கமான ரஜினி இதில் இருக்கமாட்டார். வழக்கமாக ரஜினி படங்களில் வரும் பில்டப் காட்சிகள், ஸ்டைல், பன்ச் வசனங்கள், மாஸ் காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இருக்காது. அதற்கு காரணம் இந்த படத்தை இயக்கிய மணிரத்னம்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவரின் படங்களில் பெரிதாக வசனங்கள் இருக்காது. ரத்தனசுருக்கமாக அதே சமயம் நச்சென வசனங்கள் இருக்கும். முடிந்தவரை ஒரு காட்சியை விஸ்வலாக சொல்லவே அவர் முயற்சி செய்வார். தளபதி படமும் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருந்தது.

மகாபாரதத்தில் வரும் துரியோதனன் – கர்ணன் இடையேயான நட்பை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினியும், தேவா என்கிற கதாபாத்திரத்தில் மம்முட்டியும் நடித்திருந்தனர். மேலும், ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், அரவிந்த்சாமி, ஷோபானா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

பாலிவுட் நடிகர் அம்ரிஷ் பூரி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் 1991ம் வருடம் வெளியானது. இந்த பட்டத்திற்கு அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார் இளையராஜா. குறிப்பாக சின்னத் தாயவள், சுந்தரி கண்ணால் ஒரு சேதி, காட்டுக்குயிலு மனசுக்குள்ள, ராக்கம்மா கையை தட்டு பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ரஜினியை ரசிக்கும் எல்லோருக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தை மணிரத்னத்தின் அண்ணன் ஜிவி தயாரித்திருந்தார். இந்நிலையில், இந்த படம் பெரிய லாபம் இல்லை என வினியோகஸ்தர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

4.15 லட்சம் கொடுத்து வாங்கி தளபதி படத்தை ரிலீஸ் செய்தேன். ஆனால், ஒன்னே கால் லட்சம்தான் கிடைத்தது. 3 லட்சம் நஷ்டம். ரஜினி சாரை சந்தித்து இப்படி ஆகிவிட்டது என அழுதேன். ‘வருத்தப்படாதீர்கள். அடுத்து மன்னன் படம் பண்ணுகிறேன். அதை உங்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்க சொல்கிறேன்’ என சொன்னார்’ என அந்த வினியோகஸ்தர் சொல்லி இருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

1 hour ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago