தனுஷூக்காக எழுதின கதையா? அப்புறம் எப்படி கார்த்தி? சூப்பர்ஹிட் படமாச்சே!

by sankaran v |
தனுஷூக்காக எழுதின கதையா? அப்புறம் எப்படி கார்த்தி? சூப்பர்ஹிட் படமாச்சே!
X

தமிழ்சினிமா உலகில் சில படங்கள் சில நடிகரை மனதில் வைத்து எழுதுவார்கள். ஆனால் சில காரணங்களால் அந்தக் குறிப்பிட்ட நடிகரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போவதுண்டு. அதுபோன்ற சமயங்களில் படத்தின் கதை நன்றாக இருக்கும்பட்சத்தில் அது வேற ஒரு நடிகருக்குப் போய்விடுகிறது.

அது என்ன படம்?: அதுபோன்ற ஒரு படம் தான் நாம் பார்க்கப் போவதும். அது என்ன படம்? முதலில் யார் நடிப்பதாக இருந்து பின்பு யார் நடித்தார்? என்ன காரணத்தால் அந்த நடிகர் நடிக்க முடியாமல் போனது? எதனால் வேற நடிகருக்குப் படம் போச்சுது என்று பார்க்கலாமா...

தனுஷ்: நான் மகான் அல்ல கதையை தனுஷை மனதில் வைத்தே உருவாக்கி இருந்தாராம் இயக்குனர் சுசீந்திரன். அதை முதலில் மகேந்திரகுமார் ஜெய் என்பவர் தயாரிக்க இருந்தார். அவர்தான் கார்த்திக்கு இந்த கதையை சொல்ல சுசீந்திரனை அனுப்பினார்.

கார்த்தி: கதை பிடிச்சிருக்கு என சொன்ன கார்த்தி ஸ்டூடியோ கிரீன் தயாரித்தால் நடிக்கிறேன் என சொல்லி இருக்கிறார். அதனால் மகேந்திரகுமார் ஜெய் சம்மதத்தோட கார்த்தியை வச்சு நான் மகான் அல்ல படத்தை இயக்கினார் சுசீந்திரன்.

ஆக்ஷன் படம்: 2010ல் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி, காஜல் அகர்வால் இணைந்து நடித்த படம் நான் மகான் அல்ல. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஜெயப்பிரகாஷ், சூரி, விஜய்சேதுபதி, லட்சுமி ராமகிருஷ்ணன், அருள்தாஸ் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

வாவா நிலவா புடிச்சி, இறகை போலே, ஒரு மாலை நேரம், தெய்வம் இல்லை ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படம் காட்சிக்குக் காட்சி ஆக்ஷன் ஆகவும், பல திடுக்கிடும் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகவும் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இருந்துதான் கார்த்தியோட அதிரடி ஆக்ஷன் நடிப்பு வெளிப்பட்டது.

Next Story