அண்ணாமலை படத்தில் ரஜினி, பாம்பு காமெடி ரொம்ப அசத்தலாக இருக்கும். யாருமே அதை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். லேடீஸ் ஹாஸ்டல்ல பாம்பு. பால்காரர் ரஜினி வருகிறார். அவர் பயந்தபடி கெத்து காட்டுவார். ‘ஒண்ணும் இல்ல. பாம்பு நம்மளக் கடிச்சிடுமோன்னு பயம். பாம்புக்கு நம்மளைக் கண்டு பயம் என்றபடி நாகராஜா பொண்ணுங்க முன்னாடி மானத்தை வாங்கிடாதப்பா உனக்கு 100 முறை பாலாபிஷேகம் பண்றேன்.
கண்ணை மூடிக் கண்ணைத் திறக்குதுக்குள்ள போயிருப்பா’ன்னு சொல்லி அதகளமாகக் காமெடி பண்ணுவார். இந்தக் காட்சி எப்படி உருவானது என்பதை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சுவாரசியமாக சொல்கிறார். வாங்க பார்க்கலாம். அப்போ எல்லாம் இந்த அனிமலைத் துன்புறுத்தக்கூடாதுன்னு சொல்ற ரூல்ஸ் இல்ல.
பாம்புடன் ரஜினி: பாம்பு சீன் எடுத்தா அதோட பல்லைத் தைச்சிடுவாங்க. பாம்பை வச்சிட்டு படம் எடுக்க முடிவு பண்ணிட்டோம். பாம்பு வந்து சூட்டிங்கிற்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காது. அதை விட்டுட்டா அது பாட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கும். ரஜினி சாருக்கு எங்கே போகுதுன்னு சொல்லத் தெரியாது. பாம்பை அவருக்கிட்ட விட்டாச்சு. யாருமே அசையக்கூடாது. சத்தம் போடக்கூடாது. பாம்பை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. ரஜினிசாரே அசைந்து பயப்படக் கூடாது.
ரிஸ்கியான மேட்டர்: அவரு உடம்பு கொஞ்சம் அசைஞ்சா கூட அது வேற மாதிரி போயிடும். உடம்பு முழுவதும் அது ஊர்ந்து போகுது. பயத்துல சிரிக்கிறாரு அவரு. ‘நச்’சுன்னு படம் எடுத்துது அது அந்த சீன்ல. படம் எடுத்ததுக்குப் பிறகு தான் ஹைலைட். அது ரொம்ப ரிஸ்கியான மேட்டர். பாம்புகாரனுக்கும், மேனேஜருக்கும் வெளியில சண்டை நடக்குது. முடிஞ்சிப் போச்சே.
வாயைத் தைக்கலை: என்னத்துக்கு பாம்புக்காரனுக்கு காசைக் கொடுக்க வேண்டியதுதானேன்னு நினைச்சேன். அந்த ஆளு பாம்பு வாயைத் தைக்கலையாம். அப்புறம்தான் ரஜினி சாருக்கே அது தெரிஞ்சுதாம். ‘ஆ… முடிஞ்சுப்போச்சு… வேணாண்டா… இதெல்லாம். டேய் விளையாடாதடா’ன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…