தயாரிப்பாளருக்கு ஒன்றரை லட்சம் நஷ்டம்.. 7 மடங்கு லாபம் பார்த்துக் கொடுத்த விஜயகாந்த்..

Published on: August 8, 2025
---Advertisement---

விஜயகாந்த் மிகவும் பெருந்தன்மை மிக்க மனிதர் என அனைவருக்கும் தெரியும். அதையும் தாண்டி கொடை வள்ளலாகவும் இருந்திருக்கிறார். அவருடைய சினிமா வாழ்க்கையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி பணத்தை சம்பாதித்தாரோ இல்லையோ மக்கள் செல்வத்தை சம்பாதித்து இருக்கிறார். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜயகாந்த் இறந்த பிறகும் அவரை இன்னும் மக்கள் தங்கள் நெஞ்சங்களில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

அவருடைய நினைவிடத்திற்கு சென்று நாள்தோறும் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டும் வருகின்றனர். இப்படிப்பட்ட உன்னதமான மனிதருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அதில் ஒருவர் அரசியலுக்கும் இன்னொருவர் சினிமாவிற்கும் வந்துவிட்டார். விஜயகாந்த் எப்படி அரசியலிலும் சினிமாவிலும் கொடிகட்டி பறந்தாரோ அதைப்போல அவருடைய இரு மகன்களும் இரு துருவங்களாக நின்று விஜயகாந்த் பெருமையை பறைசாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

அவருடைய இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. அதில் பிரேமலதா விஜயகாந்த் மிக உருக்கமாக பேசி இருந்தார். அந்த விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் விஜயகாந்த் பற்றி பெரிய அளவில் பேசியதை நாம் கேட்க முடிந்தது. இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளரின் வறுமையை விஜயகாந்த் எப்படி நீக்கினார் என்பதை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

siva

siva

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சிவா. சொந்த ஊரில் ஏதோ கேமிராவை வைத்து தொழில் செய்து வந்திருக்கிறார். அதை வைத்து பல ஸ்டில்ஸ்களை எடுக்க ஏன் நீ சினிமாவிற்கு போக கூடாது என பல பேர் கூற அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தாராம். அவருடைய பங்காக ஒரு மூன்றரை லட்சம் ரூபாய் அவர் வீட்டில் இருந்ததை எடுத்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.

விஜயகாந்திடம் கால்ஷீட் கேட்டதும் அவர் கொடுக்க அப்படி உருவானதுதான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ திரைப்படம். இந்தப் படத்தில் ரேகா நடித்திருப்பார். ஆனால் அந்தப் படம் ஓடவில்லையாம். கூட்டி கழித்து பார்த்தால் அந்தப் படத்தில் சிவாவுக்கு ஒன்றரை லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் திரும்பவும் ஊருக்கு போய் ஸ்டூடியோவில் போய் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் சிவா.

ஒரு நாள் விஜயகாந்த் ராவுத்தர் பேசிக்கிட்டு இருக்கும் போது சிவா நியாபகம் வர உடனே கிளம்பி வா என விஜயகாந்த் அலுவலகத்தில் இருந்து சிவாவுக்கு போன் வந்திருக்கிறது. ஏனெனில் சொல்வதெல்லாம் உண்மை படத்தில் சிவாவின் வேலையை கவனித்துக் கொண்டிருந்தாராம் விஜயகாந்த். அது அவருக்கு பிடித்து போக எங்களுடன் வொர்க்கிங் பாட்னராக சேர்ந்து கொள் என சொல்லி சேர்த்துக் கொண்டாராம். அப்படி இருந்ததால் ஒரு படத்தில் வந்த லாபத்தில் 25 சதவீத தொகையை அதாவது அப்போது ஏழரை லட்சத்தை விஜயகாந்த் சிவாவுக்கு கொடுத்திருக்கிறார். இதை செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment