3 வெள்ளிவிழாப் படங்கள்... அடுத்த படத்துக்கு ரஜினியை விட அதிக சம்பளம் பெற்ற நடிகர்... அட அவரா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் என்றாலே தியேட்டரே ஆர்ப்பரிக்கும். அவரது ஸ்டைலும், அந்த நடை, உடையும் சின்னக் குழந்தைகளுக்குக்கூட பிடித்துவிடும். அதனால் உச்ச நடிகர் என்றே திரையுலகம் அவரைக் கொண்டாடும். அவர் எந்த படத்தில் நடித்தாலும் அது சூப்பர்ஹிட் ஆகிவிடும். அந்த வகையில் அவரது சம்பளமும் உச்சத்தில் இருந்தது. அந்தவகையில் ரஜினியின் படங்களுக்குத் தனி மவுசு இன்று வரை உண்டு.
சாதாரண தொழிலாளி: அப்போது ராஜ்கிரண் திரையுலகில் சாதாரண தொழிலாளியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவைக் கற்று முதலில் விநியோகஸ்தர் ஆனார். அதன்பிறகு தயாரிப்பாளர் ஆனார். இயக்குனரானார். அதன்பிறகு இயக்கி நடித்தார். இப்படிப் படிப்படியாக முன்னேறி அவர் இயக்கி நடித்த முதல் 3 படங்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. அப்போது நடந்த ஒரு சுவராசியமான விஷயத்தைப் பார்க்கலாமா...
குடும்பத்திற்கு புத்திமதி: ஒரு காலத்தில் ராஜ்கிரண் படங்கள் என்றாலே தாய்க்குலங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு படம் பார்க்க தியேட்டருக்குச் செல்வார்கள். அந்த அளவுக்கு குடும்பத்திற்கு புத்திமதி சொல்வார். இவர் முதலில் என்ன பெத்த ராசா என்ற படத்தைத் தயாரித்தார். அதன்பிறகுதான் என் ராசாவின் மனசிலே படத்தை இயக்கி நடித்தார். அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ரஜினிக்கு சம்பளம்: தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் என பல படங்களில் நடித்தார். இந்த 3 படங்களும் ஹிட். தயாரிப்பாளர் டி.சிவா ராஜ்கிரணிடம் மாணிக்கம் படத்தின் கதையைச் சொன்னாராம். அப்போது கதைகேட்டதும் ராஜ்கிரண் நடிக்க சம்மதித்தார். அதே நேரம் ஒரு கண்டிஷன் போட்டாராம். ரஜினிக்கு சம்பளம் 1கோடி.
3 வெள்ளிவிழாப் படங்கள்: அதை விட 10 லட்சம் அதிகமாகத் தந்தால் நடிக்கிறேன் என்றாராம். அப்போது அவர் 3 வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்து இருந்ததால் தயாரிப்பாளர் சிவாவும் 'ஓகே' சொல்லிவிட்டாராம். அப்படி சம்பளம் கொடுத்ததற்கு எல்லா நடிகர்களும் அவரைத் திட்டினார்களாம். இதை சாய்வித் சித்ரா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டி.சிவாவே பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார்.