கைப்புள்ள கேரக்டர் உருவானது எப்படி? சுந்தர்.சி., வடிவேலு கொடுத்த 'குபீர்' தகவல்

வைகைப் புயல் வடிவேலுன்னு சொன்னாலே சில கேரக்டர்கள்தான் நம் நினைவுக்கு வரும். அதுல மறக்க முடியாத கேரக்டர் கைப்புள்ள. இது வின்னர் படத்தில் வரும். ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பாப்புலர் ஆன கேரக்டர். இதுகுறித்து பிரபல இயக்குனர் சுந்தர்.சி. கைப்புள்ள கேரக்டரை நான் உருவாக்கல. வடிவேலு உருவாக்குனதுதான் என்கிறார் சுந்தர்.சி. இதுபற்றி மேலும் அவர் சொன்ன சுவாரசியமான தகவல் இதுதான்.
கைப்புள்ள கேரக்டர் பற்றிச் சொல்லணும்னா வடிவேலுவோட கால் அந்த நேரத்துல உடைஞ்சி நடக்க முடியாமல் இருந்தாரு. அப்போ அவரை படத்துல நடிக்கக் கூப்பிட்டேன். 'என்னண்ணா இப்பப் போயி கூப்பிடுறேங்களே... நடக்க முடியாம இருக்கேனே'ன்னு வடிவேலு ரொம்ப ஃபீலிங்கோடு சொன்னாரு என்கிறார் சுந்தர்.சி
அப்போ சுந்தர்.சி. ஒரு ஐடியா கொடுத்தாராம். 'படத்தோட முதல் சீன்ல காலுல அடி படுற மாதிரி வச்சிக்குவோம். அதுக்கு அப்புறம் நீங்க நொண்டி நொண்டி நடந்தா கூட பரவாயில்ல'ன்னு சொல்லிட்டாராம். அந்தக் கால் நொண்டி நொண்டி நடந்தாலும் வடிவேலு 10 விதமா நடந்து காட்டுனாராம்.
'2வது நடையில தோள், 5வது நடையில கால், 8வது நடையில ஃபேஸ் லுக் இதெல்லாம் சேர்ந்த மாதிரி நடந்து காட்டுங்க'ன்னு அவரை உசுப்பேத்துறதுக்காக சுந்தர்.சி. சொன்னாராம். உடனே வடிவேலுவும் அப்படி நடந்து காட்டுனாராம். தோளை லேசா குலுக்கிக்கிட்டு காலை நொண்டியபடி வருவாராம்.
அதே நேரம் முகம் இந்த இரண்டுக்குமே சம்பந்தம் இல்லாம கம்பீரமா இருக்குமாம். அந்த முகத்துல ஒரு தெனாவட்டு, தோள்ல ஒரு குலுக்கல், கால் மட்டும் நொண்டி இருக்கும். அந்த நடைதான் நீங்க படத்துல பார்க்குற நடை. அந்தளவு அவர் மகாநடிகன். நாங்க போடுறது சும்மா கோடுதான். அந்த கிரெடிட் எல்லாம் அவருக்குத்தான் போய்ச் சேரும் என்கிறார் சுந்தர்.சி.
நாய்சேகர் கேரக்டருக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மட்டும் வீக். அதுக்கு 5 நிமிஷம் தான் டைம் இருந்துச்சு. அதுக்குள்ள அவ்ளோ சூப்பரா பண்ணினாரு என்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. அப்போது வடிவேலு சொன்ன போது 'ஒரு படத்துல கிணத்துல குதிக்கிறேன்னு உள்ள குதிச்சிட்டேன். கால் அடிபட்டுது. அப்போதான் இவரு கூப்பிட்டாரு.
அப்போ நான் இந்தக் கால வச்சி எப்படி நடிக்கிறதுன்னு கேட்கும்போது இவருதான் இப்படியே நடிக்கலாம்னு ஐடியா கொடுத்தாரு. அப்போ கால் நொண்டிய மாதிரி நடக்கும். ரவுடிங்கற கேரக்டர்ங்கறதால தோளைக் குலுக்கியபடி முகத்தை கம்பீரமா வச்சிக்கிட்டு நொண்டி நொண்டி இப்படி நடந்தேன்' என்று நடந்து காட்டுகிறார் வடிவேலு.