எனக்கும், பாக்கியராஜிக்கும் லவ்வுன்னு போட்டுக் கொடுத்துட்டாங்க… நடிகை சொன்ன அந்த விஷயம்!

Published on: August 8, 2025
---Advertisement---

கன்னிப்பருவத்திலே படத்தில் கதாநாயகியாக நடித்த வடிவுக்கரசி தனக்கும் பாக்கியராஜிக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இப்படி பகிர்ந்துள்ளார்.

கன்னிப்பருவத்திலே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும் போது டே நைட் ஒர்க் தொடர்ந்தது. பாக்கியராஜ் வேற சுவர் இல்லாத சித்திரங்கள் படத்துக்குக் கோபிச்செட்டிப்பாளையம் போகணும். போய்ட்டு வந்துட்டாருன்னு நினைக்கிறேன்.

டே நைட் ஒர்க்ல அங்கே ஒரு வீட்ல தான் நான் எப்பவும் இருப்பேன். ஜெயந்தி ஓட்டல்ல ரூம். டே நைட் ஒர்க்னா நைட் சூட்டிங் முடிஞ்சதும் காலையில குளிச்சிட்டு உடனே சூட்டிங் வந்துடணும். இதுல எனக்கு மட்டும்தான் அம்பாசிடர் கார் கொடுத்தாங்க. என்னன்னே தெரியாது. இவங்க எல்லாரும் ப்ளூ கலர் வேன்ல வருவாங்க. நான் கொஞ்ச தூரம் போன உடனே நிறுத்திட்டு அதுல இருந்து பாக்கியராஜ் சாரை மட்டும் கூட்டிட்டு நான் போவேன்.

அப்போதான் அவரு பிரவீனா கதை அவங்களோட லவ் ஸ்டோரியை எல்லாம் சொல்வாரு. இந்த நல்ல ப்ரண்ட்ஷிப்ல இருக்கும்போது யாரோ தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு சார்கிட்ட தப்பா சொல்லிட்டாங்க. பாக்கியராஜியும், வடிவுக்கரசியும் லவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அங்கே சூட்டிங்கே நடக்கல. அவரோட ஒரிஜினல் லவ் ஸ்டோரி நமக்குத் தெரியும் என்று சிரிக்கிறார் வடிவுக்கரசி.

கன்னிப்பருவத்திலே படத்தில் கதைப்படி ஹீரோ ராஜேஷ் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம்பட்டு ஆண்மை இழந்து விடுவார். அவரது மனைவி வடிவுக்கரசி. அவளைத் திருப்திப்படுத்த முடியாது. ராஜேஷின் நண்பன் பாக்கியராஜ். அவர் வடிவுக்கரசியின் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அவரை அடைய நினைப்பார். அதுதான் கதை.

பாக்கியராஜின் மனைவி பெயர் பிரவீனா. அவர் மௌனகீதங்கள், பாமாருக்மணி, இன்று போய் நாளை வா ஆகிய படங்களில் நடித்துள்ளார். உடல்நலம் சரியில்லாமல் இறந்து போனார். அதன்பிறகு பாக்கியராஜ் பூர்ணிமா ஜெயராமை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment