செம போதையில் ஹோட்டலில் விஜய் சேதுபதி செய்த அலப்பறை!.. லீக் செய்த பிரபலம்!…

Published on: March 18, 2025
---Advertisement---

Vijay sethupathi: பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர்தான் விஜய் சேதுபதி. பொதுவாக சினிமாவில் நடிக்க வரும் அறிமுக நடிகர்கள் தங்களுடன் அழகான கதாநாயகி ஜோடியாக நடிக்க வேண்டும், சண்டை காட்சிகள் இருக்க வேண்டும், பன்ச் வசனம் பேச வேண்டும், வெளிநாட்டில் பாடல் காட்சிகள் இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பார்கள்.

இமேஜ் இல்லாத ஹீரோ: ஆனால், இதில் எதையுமே யோசிக்காதவர்தான் விஜய் சேதுபதி. கதை மற்றும் தனது கதாபாத்திரம் பிடித்துப்போனால் யார் இயக்குனர் என்றாலும், யார் கதாநாயகி என்றாலும் நடிப்பார். அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்துப்போனது. வழக்கமான ஹீரோக்கள் காட்டும் ஹீரோயிசத்தை தனது படங்களில் விஜய் சேதுபதி காட்டவே மாட்டார்.

அதனால்தான் நல்ல மற்றும் புதுவிதமான கதைகளை வைத்திருந்த பல அறிமுக இயக்குனர்கள் விஜய் சேதுபதி பக்கம் போனார்கள். ஹீரோ என்பதை விட கதையின் நாயகன் என்பதையே விஜய் சேதுபதி விரும்புகிறார். பல படங்களில் ஓரிரு காட்சிகளில் வரும் கேமியோ வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

வில்லனாக கலக்கிய படங்கள்: மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்களில் வில்லானகவும் அசத்தியிருக்கிறார். சினிமாவில் நடிக்க துவங்கி பல வருடங்கள் ஆகியும் எந்த இமேஜுக்குள் சிக்காத ஒரு நடிகராக இருக்கிறார் விஜய் சேதுபதி. அதுவே அவரின் பலமாகவும் இருக்கிறது. இவ்வளவு நேரம் நாம் அவரை பாராட்டி பேசினாலும் சொல்ல வரும் செய்திக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

மதுபோதையில் அலப்பறை: ஒரு பார்ட்டியில் ஃபுல்லா சரக்கடித்துவிட்டு அவர் செய்த அலப்பறை பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். பார்ட்டிகளில் கலந்துகொள்ளும்போது சில நடிகர்கள் மது அருந்துவார்கள். எல்லை மீறி போகும்போது அவர்களும் எல்லை மீறி நடந்துகொள்வார்கள். விஜய் சேதுபதி சினிமாவில் வளர்ந்துகொண்டிருந்த நேரத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஏழு நட்சத்திர ஹோட்டலில் ஒரு பார்ட்டி நடந்தது.

அதில், கலந்துகொண்ட விஜய் சேதுபதி கொஞ்சம் அதிகமாகவே மது அருந்திவிட்டு அலப்பறை செய்ய துவங்கியிருக்கிறார். ரிசப்சனில் வந்து அமர்ந்துகொண்டு ‘எனக்கு இங்கே பிரியாணி எடுத்துட்டு வாங்க’ என அவர் சொல்ல ஹோட்டல் நிர்வாகமோ முடியாது என சொல்ல களோபரம் ஆகியிருக்கிறது. அதன்பின் பிரியாணி கொண்டு வந்து கொடுத்தால் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தட்டை தூக்கி எறிந்திருக்கிறார். அதன்பின் ஹோட்டல் பவுன்சர்கள் அவரை இழுத்து சென்று காரில் அமரவைத்து அனுப்பியிருக்கிறார்கள். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தனன் ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment