Categories: latest news

வெற்றிமாறனுக்காக கடனாளியாக மாறியவன் மிஷ்கின்!.. நெகிழ்ந்து பேசும் சமுத்திரக்கனி!…

Director Myskin: சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் கோலிவுட்டில், இயக்குனராக களமிறங்கியவர் மிஷ்கின். நிறைய நாவல்களை படிப்பவர். ஜப்பான் மொழி படங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். ஜப்பான் மொழியில் வித்தியாசமான கதைகளை இயக்கி பெரும் புகழ் பெற்ற அகிரா குரோசாவை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். அதனால்தான் மிஷ்கின் படங்களில் குரோசாவின் பாதிப்பு சில காட்சிகளில் இருக்கும்.

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதை சொல்லியாக இருப்பவர் மிஷ்கின். பல இயக்குனர்களுக்கும் இவரை பிடிக்கும். தான் எடுக்கும் படங்களில் பல பரிசோதனை முயற்சிகளை செய்வார். காமெடி நடிகர் பாண்டியராஜனை அஞ்சாதே படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். மிஷ்கினால் மட்டுமே அப்படி யோசிக்க முடியும்.

சேரனை வைத்து யுத்தம் செய் படத்தை எடுத்தார். அந்த படத்தில் இயக்குனர் அமீரை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். இதையெல்லாம் யாருமே செய்து பார்த்தது இல்லை. தனது படங்களில் பல புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார். பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என முக்கிய படங்களை இயக்கியுள்ளார்.

நல்ல இயக்குனராக இருக்கும் இவர் சினிமா விழாக்களில் பேசும்போது கெட்டவார்த்தைகளை பயன்படுத்திவிடுவார். அதோடு, சர்ச்சையான கருத்துக்களையும் சொல்லி பலரிடமும் திட்டு வாங்குவார். வெற்றிமாறன், அமீர் என எல்லோரும் இருந்த மேடையில் இளையராஜாவை ‘அவன் இவன்’ என சொல்லி சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் மன்னிப்பும் கேட்டார். திரையுலகில் மட்டுமல்ல. ரசிகர்கள் பலருக்குமே மிஷ்கின் மீது தவறான இமேஜை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதீத அன்பு மற்றும் உரிமையில்தான் அவர் அப்படி பேசுகிறார். அதை எல்லோரும் சரியாக புரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.

இதனால் மனம் வெறுத்துப்போய் சீக்கிரம் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் எனவும் சொன்னார். ஒருபக்கம், நடிப்பிலும் கலக்கி வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் மிஷ்கினின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒரு பேட்டியில் மிஷ்கின் பற்றி பேசியுள்ள சமுத்திரக்கனி ‘வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தை ரிலீஸுக்கு முன்னாடி மிஷ்கின் பார்த்தான். அந்த படம் அவனுக்கு பிடித்துப்போனதால் உடனே இயக்குனர் ஷங்கர், மணிரத்னம் என பலரையும் அழைத்து வந்து ஒரு ஹாலை பிடித்து அவர்களை படம் பார்க்க வைத்து ‘இந்த படத்தை பற்றி நீங்கள் அதிகம் பேச வேண்டும். மிகவும் நல்ல படம்’ என கோரிக்கை வைத்தான். அவன் கையில் பணமே இல்லை. 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி விசாரணை படத்தை ரசிகரக்ளிடம் கொண்டு சேர்த்தான். இந்த மனசு யாருக்கு வரும்?’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

5 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

12 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

13 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

14 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago