அந்த சாங்க அடிச்சுக்க இன்னும் எந்த சாங்கும் வரல.. விஜய் சொன்ன அந்த பாடல்

by ராம் சுதன் |
அந்த சாங்க அடிச்சுக்க இன்னும் எந்த சாங்கும் வரல.. விஜய் சொன்ன அந்த பாடல்
X

விஜய் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த பாடகர் என அனைவருக்குமே தெரியும். அவர் இதுவரை நடித்த படங்களில் ஒரு பாடல் கண்டிப்பாக அவர் குரலில் இருக்கும். அப்படி அவர் பாடிய பாடலும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அதுவும் ஆரம்பத்தில் இருந்து இப்போது ரிலீஸான கோட் படம் வரை எல்லா படங்களிலும் விஜய் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பாளர்களிடமும் இவர் பாடியிருக்கிறார்.

விஜய் இந்தளவுக்கு பாடுகிறார் என்றால் அவருடைய அம்மா மற்றும் மாமா இருவருமே பின்னணி பாடகர்கள். அதனால்தான் விஜய்க்கும் அப்படி ஒரு திறமை இருக்கிறது. ஏன் விஜய் நடித்த தொட்டபெட்டா பாடலை விஜயும் அவருடைய அம்மாவும் தான் சேர்ந்து பாடிய பாடல். அதுவும் இப்போது வரை அனைவருக்கும் பிடித்தமான பாடலாகவே இருக்கிறது. விஜயின் படம் ரிலீஸாகிறது அவர் பாடுவாரா என்றுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

விஜய் ஒரு பாடலை பாடுகிறார் என்றால் அந்த படத்தின் இசையமைப்பாளர் அந்த பாடலுக்கு கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதனால்தான் அவர் பாடும் பாடல் இன்று வரை ஹிட்டாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தை பற்றி விஜய் சொன்ன ஒரு தகவல் இன்று வைரலாகி வருகின்றது. விஜய் நடித்த திருப்பாச்சி, புலி, சச்சின் என பல படங்களுக்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்ததில் தன் படமான சச்சின் படத்தில் கண் மூடி திறக்கும் பாடல்தான் எனக்கு எப்போதுமே ஃபேவரைட்டான பாடல் என விஜய் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த பாடலுக்கு பிறகு என் படங்களில் அதே மாதிரியான மெலடி பாடல் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும் என்றும் அந்த பேட்டியில் விஜய் கூறியிருக்கிறார்.

விஜய் இப்போது நடிக்கும் படமான ஜனநாயகன் படத்திற்கு அனிருத்தான் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு பிறகு விஜய் ஒரேடியாக சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு முழு நேர அரசியல் வாதியாக இறங்குகிறார். அதனால் ஜன நாயகன் படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Next Story