தனிமைதான் பிடிக்கும்.. மைண்ட்ல இதுதான் ஓடிக்கிட்டே இருக்கும்! விஜயே சொன்னத கேளுங்க

Published on: March 18, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலிலும் மாஸ் காட்ட இருக்கிறார். அதற்கான முன்னெடுப்பாக அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அனல்பறப்பவையாக இருக்கின்றன. அரசியல் களத்தில் விஜயின் அரசியல் வருகை சூடுபிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு விஜயின் பேச்சு அனைவரையும் கதிகலங்க வைத்திருக்கிறது.

அவருடன் பழகியவர்களாலெயே விஜயா இப்படி பேசுனது என ஆச்சரியப்பட்டு போயிருக்கின்றனர். ஏனெனில் விஜய் பொதுவாகவே மிகவும் சைலண்டான நபர். சூட்டிங் ஸ்பாட்டிலும் யாருடனும் அதிகமாக பேசமாட்டார். அவருடைய ஷாட் முடிந்ததும் தனியாக போய் உட்கார்ந்து விடுவார். அவரை சுற்றி ஐந்து நண்பர்கள். இவர்களுடன் தான் விஜயின் சந்தோஷம் துக்கம் எல்லாமே நடந்திருக்கின்றன.

அவர்கள் தான் இப்போது வரை விஜயுடனேயே இருக்கிறவர்கள். இந்த நிலையில் விஜயின் ஒரு பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது தான் எப்படிப்பட்டவன் என முன்பே விஜய் கூறியிருக்கிறார். அதாவது ‘ பாடல்கள் அவ்வப்போது கேட்பேன். ஆனால் நிறைய யோசித்துக் கொண்டே இருப்பேன். எதாவது நினைத்து யோசித்துக் கொண்டிருப்பேன். மைண்ட்ல அது இதுனு வந்து கொண்டே இருக்கும். மணிக்கணக்கா தனியா உட்கார்ந்து எதையாவது யோசிப்பேன். தனிமை என்பது மிகவும் எனக்கு பிடிக்கும்’ என பேசியிருக்கிறார் விஜய்.

தனிமைதான் பிடிக்கும் என ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜன நாயகன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது விஜய்க்கு கடைசி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் இதற்கடுத்தப்படியாக இன்னொரு படத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எச்.வினோத்துடனான படம் கண்டிப்பாக அரசியல் பேசும் படமாகத்தான் இருக்கப்போகிறது என தலைப்பை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அதனால் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் படம் ரிலீஸிலும் எதாவது சில பிரச்சினைகள் கூட வரலாம் என்றும் சில பேர் கூறி வருகிறார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment