அப்பவே அந்தமாதிரி சப்ஜெக்டைத் தொட்ட இயக்குனர்… துணிச்சலாக நடித்த விஜயகாந்த்

Published on: March 18, 2025
---Advertisement---

விஜயகாந்த் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய புலன் விசாரணை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத படம். இதுகுறித்து இயக்குனர் பகிர்ந்த தகவல்களைப் பார்ப்போமா…

புலன் விசாரணை படத்தில் விஜயகாந்த் ஆனஸ்ட்ராஜ் என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். அவரது உண்மையான பெயர் ராஜ். இதனால் அந்தப் பெயரும் இந்தக் கேரக்டரில் வருவதால் அவருக்கு உடனே கனெக்ட் ஆகி விட்டது.

ஆனஸ்ட்ராஜ்: கரடுமுரடான ஒருவன் போலீஸ் அதிகாரியாக இருந்தால் அவன் எப்படி இருப்பான் என்பதை பல போலீஸ் அதிகாரிகளை சந்தித்து அவரது கேரக்டர்களை சேகரித்து உருவாக்கியதுதான் ஆனஸ்ட்ராஜ் கேரக்டர். முதல் நாள் சூட்டிங். விஜயவாஹினி ஸ்டூடியோ 8வது மாடியில் சூட்டிங். 500 ஜூனியர் ஆர்டிஸ்ட், 80 பைட்டர்ஸ், 100 டான்சர்ஸ். முதல்ல இதுதான் இதுக்குத்தான் பாடல்.

மெடிக்கல் மாபியா: தமிழ்நாட்டுலயே அப்போ பெரிய செட். எனக்கு அப்போ 23 வயசு. எனக்குத் தைரியத்தைக் கொடுத்தவர் இயக்குனர் மணிவண்ணன். அவர்கிட்ட நான் அசிஸ்டண்டா இருந்தப்ப எது வந்தாலும், வரலன்னாலும் அவர் படம் எடுப்பார். ஹீரோ வந்தாலும், இல்லன்னாலும் எடுப்பார். எல்லா வேலையும் இறங்கி செய்வார். அது எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது.

மெடிக்கல் மாபியா, உறுப்புத்திருட்டு போலீஸ் ஸ்டேஷன்ல நடக்கல. ஆஸ்பிட்டல்லதான் நடக்கு. அன்னைக்கும் இது நடந்தது. வெளியே நியூஸ் வராது. அப்ப சொல்லும்போது இது எப்படி நடக்கும்னு ஆச்சரியமா கேட்டாங்க. இன்னைக்கு 50 பர்சன்ட் அது வெளியே தெரியுது.

மதிப்பு 10 கோடி: உறுப்பு திருட்டு ஏன் பண்ணனும்? இதை ஒரு பிசினஸா ஏன் பண்ணனும்? கொலை பண்ணி அப்படி எடுத்திருக்கான் அப்படிங்கறது நம்ப முடியாம இருந்தது. அப்போ நான் சொன்னேன். ஒரு மனிதனோட உடல் பாகத்தோட மதிப்பு 10 கோடி. பிச்சைக்காரன்கிட்ட கூட அப்படி அனுபவிக்க முடியாத சொத்து இருக்கு.

ஆங்கிலப்படப் பாணி: அந்தவகையில இப்ராகிம் ராவுத்தரை சம்மதிக்க வச்சிட்டேன். அதுக்குத் தான் எனக்கு 2 வருஷம் ஆச்சு. அவருக்கு விஜயகாந்தை வைத்து இங்கிலீஷ் படம் எடுக்கணும்னு ஆசை. அந்தவகையில விஜயகாந்துக்கு இதுல ஒரு பாட்டு கூட கிடையாது. 50வயசான கேரக்டர். காமெடி கிடையாது. ஆங்கிலப்படப் பாணியில் வந்தது.

9 படம் பிளாப்: அப்போ விஜயகாந்த் எங்கிட்ட சொன்னாரு. எனக்கு 9 படம் பிளாப். இது 10வது படம். இன்னும் 3 படம் கையில இருக்கு. ஏதோ ஒரு படம் ஓடிடும். அடுத்தவங்கள வச்சி நீ பண்ணினா இது ஓடலன்னா இதுதான் உனக்கு கடைசி படம். உனக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்னாரு. நான் 16 படம் டைரக்ட் பண்ணிருக்கேன். ஜூனியர் ஆர்டிஸ்டால கூட எனக்கு பிரச்சனை வந்தது. ஆனா அவரால வந்தது இல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment