எனக்காக 10 நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்தினார் கேப்டன்!.. நெகிழும் விஜயகாந்த் மேனேஜர்!..

by சிவா |
vijayakanth
X

Vijayakanth: நடிகர் என்பதை தாண்டி எல்லோருக்கும் பிடித்த ஒரு மனிதராக இருந்தவர் விஜயகாந்த். அதனால்தான் அவர் மறைந்த போது தமிழ்நாடே அவருக்காக வருத்தப்பட்டது. மதுரையிலிருந்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து பல அவமானங்களை சந்தித்து அதன்பின்னர் வாய்ப்பு கிடைத்து முன்னேறியவர்தான் விஜயகாந்த்.

சினிமாவில் ஒரு பெரிய இடத்தை விஜயகாந்த் உடனே பிடித்துவிடவில்லை. பல தோல்விகளை தாண்டி வந்தவர் இவர். இவருடன் நடிக்க மறுத்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால், நம்பிக்கையோடு தன்னை நம்பி மேலே வந்தார் விஜயகாந்த். 80களிலேயே முன்னணி நடிகராக மாறினார்.

புலன் விசாரணை, கேப்டன் பிரபகாரன், உழவன் மகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். எவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தாலும் அதை தனது தலையில் அவர் ஏற்றிக்கொண்டது இல்லை. விஜயகாந்த் மிகவும் எளிமையானவர். அந்த எளிமைதான் அவரை பலருக்கும் பிடிக்க வைத்தது.

தனக்கு தெரிந்தவர்கள். தன்னுடன் பழகுபவர்கள், தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது அன்பை பொழிவார் விஜயகாந்த். அவர்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி என்றால் அதை தன்னுடைய குடும்ப விழா என்றே நினைபபர். அதேபோல், அவர்கள் பிரச்சனையை தனது பிரச்சனையாக கருதுவார்.

விஜயகாந்திடம் பல வருடங்கள் மேனேஜராக இருந்தவார் கோபி. இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் விஜயகாந்த் பற்றிய பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். கேப்டன் எங்க முதலாளி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதுதான் எனக்கு திருமணம் நிச்சயமானது.

எனது திருமணம் 29ம் தேதி. 22ம் தேதி எங்க முதலாளி படப்பிடிப்பின் ஒரு செட்யூல் படப்பிடிப்பு முடிந்தது. நீங்கள் மறுவீடு சம்பிரதாயமெல்லாம் முடிந்து எப்போது வீட்டுக்கு வருவீர்கள்? எனக்கேட்டார். 1ம் தேதி ஆகிவிடும் என்றேன். உடனே அருகிலிருந்த இப்ராஹிம் ராவுத்தரை அழைத்து 2ம் தேதி வரை படப்பிடிப்பு வேண்டாம். கோபி வந்த பின் படப்பிடிப்பை வைத்துக்கொள்வோம் என சொல்லிவிட்டார்.

எனக்காக 10 நாட்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். ஒருவரிடம் பழகிவிட்டால் அவரை தன்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே கேப்டன் நினைப்பார்’ என உருகியிருக்கிறார் கோபி.

Next Story