Categories: latest news

எந்த படமும் செய்யாத சாதனையை செய்த சூர்ய வம்சம்!.. இப்பவரைக்கும் ரெக்கார்டுதான்!…

Suriya vamsam movie: தமிழ் திரையுலகில் மென்மையான திரைப்படங்களை இயக்கியவர் விக்ரமன். புது வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். அறிமுக இயக்குனரை வைத்து ஆர்.பி.சவுத்ரி சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் இது. அதன்பின் தொடர்ந்து புதிய மன்னர்கள், பூவே உனக்காக, உன்னை நினைத்து, சூர்ய வம்சம், வானத்தை போல, மரியாதை உள்ளிட்ட பல படங்களையும் இயக்கினார்.

இவர் இயக்கியதில் பூவே உனக்காக, சூர்ய வம்சம், வானத்தை போல ஆகிய படங்கள் நல்ல வசூலை பெற்றது. கடந்த பல வருடங்களாகவே விக்ரமன் திரைப்படங்களை இயக்குவது இல்லை. ஆனால், ஊடகங்களில் தொடர்ந்து பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

வானத்தை போல படத்தில் விஜயகாந்துடன் ஏற்பட்ட அனுபவம், உன்னை நினைத்து படத்தில் இருந்து விஜய் விலகி சூர்யா நடிக்க வந்த காரணம் என பலவற்றையும் அவர் பகிர்ந்து கொண்டார். விஜய்க்கு பூவே உனக்காக போல சென்னைக் காதல் படத்தை எடுத்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை.

புதிய மன்னர்கள் படத்தை எடுத்தபோது அதில் பல காட்சிகளில் பழைய பாடல்கள் இடம் பெற்றிருந்தது. படத்தின் வீரியத்தையே அது குறைக்கும். அதை எடுத்துவிடுங்கள் என அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனாலேயே அந்த படம் தோல்வி அடைந்ததாக சொல்லியிருந்தார்.

மேலும், சூர்ய வம்சம் செய்த சாதனை பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார். தமிழ் திரையுலக வரலாற்றில் மிகவும் அதிகம் பேர் வந்து பார்த்த திரைப்படம் சூர்ய வம்சம். சன் டிவியில் எப்போது போட்டாலும் அதிக டி.ஆர்.பியை பெற்ற திரைப்படமும் சூர்ய வம்சம்தான். யுடியூப்பில் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 70 கோடி பேர் பார்த்து ரசித்த திரைப்படம் அது. எனவே, அந்த படத்தை மீண்டும் எடுத்தால் எல்லாம் சரியாக அமையவேண்டும். எனவே, அந்த பிரஸ்ஸர் வேண்டாம் என்பதால் அதை மீண்டும் எடுக்கும் வேலையில் நான் ஈடுபடவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

ஒருபக்கம், சரத்குமார் எங்கு போனாலும் சூர்ய வம்சம் 2 படத்தில் எப்போது நடிப்பீர்கள் என்கிற கேள்வி துரத்தி வருகிறது. ஆர்.பி.சவுத்ரி அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கதை விவாதமும் நடந்து வருகிறது. விரைவில் துவங்குவோம் என சொல்லி வருகிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

3 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

15 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

16 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

16 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

18 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

24 hours ago