வடிவேலு, விவேக் இருவருடைய காமெடியில் எது பெஸ்ட்னு அவ்வப்போது ரசிகர்களுக்குள் ஒரு கேள்வி எழும். வடிவேலு பாடி லாங்குவேஜில் சிரிக்க வைப்பார். விவேக் சிரிப்புடன் சிந்தனையையும் விதைப்பார். அதனால் தான் அவரை சின்னக் கலைவாணர்னு சொன்னாங்க.
சிரிக்க கேரண்டி: அந்த வகையில் இருவருமே வெவ்வேறு டிராக்கில் பயணித்தாலும் சிரிக்க கேரண்டி கொடுப்பார்கள். அந்த வகையில் விவேக் ஒருமுறை ஃபீலிங்கோடு இயக்குனர் வி.சேகரிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா…
வடிவேலு, விவேக் இருவரும் சரிசமமா வளர்ந்து வந்துக்கிட்டு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரையும் ஒரே படத்தில் நடிக்க வைத்தவர் இயக்குனர் வி.சேகர். அவர்களின் காம்போ காமெடியில் கலக்கும். குறிப்பாக வி.சேகரின் படங்களில் டாப்பாக இருக்கும். இதுபற்றி இயக்குனர் வி.சேகர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…
வடிவேலு வேற ரூட்: விவேக்கை அறிமுகப்படுத்தியது பாலசந்தர். வடிவேலு வேற ரூட்ல வந்தாலும் எங்கிட்ட டேக் ஆப் ஆனாரு. அதுல வந்து வடிவேலுவுக்கு என்னாச்சுன்னா வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சுன்னு ரெண்டு மூணு படம் வந்த உடனேயே 5 லட்சம், 6 லட்சம் எல்லாம் சம்பளம் வந்துடுச்சு. விவேக்குக்கு சம்பளம் ஏறல.
பிஏ படிச்ச விவேக்: ஏன்னா அது கிளாஸ். பாலசந்தர் படம்னா சம்பளம் அதுதான் ரேஞ்ச். ஒருநாள் விவேக் எங்க வீட்டுக்கு வர்றாரு. ‘சார் நான் உங்க படத்துல நடிக்கணும்’னு சொன்னாரு. நீ வடிவேலுவுக்கு முன்னால தான சினிமாவுல இருக்க. பிஏ எல்லாம் படிச்சிருக்க. நல்ல தகுதின்னு சொன்னேன்.
‘இல்ல சார். என்ன இருந்தாலும் நான் பாலசந்தர் சார் மூலமா அறிமுகம் ஆனாலும் அவன் நாலஞ்சு படத்துலயே நடிச்சிட்டு பெரிய சம்பளம் வாங்குறான் சார். பெரிய நேம் வந்துடுச்சு. நமக்கு வந்து இன்னும் பெரிசா எட்டல சார்’னு சொன்னார். என்ன பண்ணலாம்னு கேட்டேன். ‘உங்க படத்துல நான் நடிக்கணும் சார்’னு சொன்னார்.
கவுண்டமணி பிரச்சனை: அவரை ஆப் பண்ணிட்டு செய்ய முடியாது. ஏற்கனவே கவுண்டமணி சார் பிரச்சனை வந்ததுன்னு சொன்னேன். ‘இல்ல சார். சேர்ந்து நல்லா பண்ணிடுவேன். எனக்கு நீங்க சம்பளம் கொடுக்கலன்னாலும் பரவாயில்லை. ஒண்ணு ரெண்டு கொடுத்தா கூட பரவாயில்லை. எனக்கு சம்பளம் பிரச்சனை கிடையாது’ன்னு சொன்னாரு.
‘அவனுக்குக் கொடுக்குற சம்பளத்தை நீ கேட்கக்கூடாது. ஏன்னா அவனுக்கு நேம் வந்துடுச்சு’ன்னு சொன்னேன். ‘சரி’ன்னு சொன்னாரு. அப்புறம் வடிவேலு வந்து ‘என்ன சார் அவரு..’ன்னு கேட்டாரு. கவுண்டமணி இருக்கும்போது உன்னைக் கொண்டு வந்தேன்ல. நீ கேட்கக்கூடாதுன்னு சொன்னேன். அப்புறம் நடிச்சாரு. ஒரு கட்டத்தில் வடிவேலு, கோவை சரளா ஜோடி மாறிப் போய் விவேக், கோவை சரளா ஆனது. அது ஒரு பெரிய கதை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விவேக்கும், வடிவேலுவும் இணைந்து வி.சேகரின் விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்துள்ளனர். படம் கலகலப்பாக இருக்கும். மிடில் கிளாஸ் மாதவன், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, கந்தா கடம்பா கதிர்வேலா ஆகிய படங்களில் இவர்களின் காமெடி பின்னிப் பெடலெடுக்கும் என்றே சொல்லலாம்.
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…
ரசிகர்களால் சூப்பர்ஸ்டார்…
கோலிவுட்டில் உள்ள…
தமிழ் சினிமாவில்…