கமல் சிகரெட்டை நிறுத்தக் காரணமே அவர்தானாம்... ஆனா அங்கதான் இருக்கு ட்விஸ்டு!

by sankaran v |
கமல் சிகரெட்டை நிறுத்தக் காரணமே அவர்தானாம்... ஆனா அங்கதான் இருக்கு ட்விஸ்டு!
X

கமல், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் தனியார் தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி ஒன்றுக்காக பேசிக்கொண்ட போது நடந்த உரையாடல் இது. அப்போது கேஎஸ்.ரவிக்குமார், 'அவ்வை சண்முகி படத்துக்கு முன்னாடியே ரஜினியோட முத்து படம் பண்றேன்.

ரஜினி பற்ற வச்சாரு: அப்போ ரஜினி சார் சிகரெட்டைப் பற்ற வச்சாரு. இல்ல இல்ல'ன்னு சொன்னேன். 'ஏன்'னாரு. 'நான் சூட்டிங் போகும்போது அப்புறமா பத்த வச்சிக்கிறேன்'னு சொன்னேன். 'முதல்ல அறையில பிடிங்க. அப்புறமா சபையில பிடிங்க'ன்னாரு.

அப்படியே எனக்குப் பழக்கமாச்சு. அதுக்கு அப்புறம் சின்ன ஆர்டிஸ்ட் படங்கள்தான் ஒண்ணுமே தெரியல. சரத்குமார் எல்லாம் சக நடிகர்தான். அவ்வை சண்முகி சூட்டிங்கிற்கு ப்ரண்ட்ஸ் வந்துருந்தாங்க. கேப்ல என்னைத் திட்டுறாங்க.

அடிக்க வந்துட்டான்: 'பெரிய இவனா நீ...ன்னு அசிங்கமா எல்லாம் பேசுனாங்க. ஞாபகம் இருக்கா. கமல் சார் படத்தை நாம எங்கெல்லாம் பார்த்திருக்கோம். நீ அவரு படத்தை சூட் பண்ணும்போது சிகரெட் பிடிக்கிறதா?'ன்னு ஒருத்தன் அடிக்கவே வந்துட்டான்.

நிஜமாவே அன்னைக்குத் தான் எனக்கு அறை விழுந்தது. அன்னைக்கு விட்டதுதான் சிகரெட் என்றார் கேஎஸ்.ரவிக்குமார்.அப்போது கமல் இப்படி சொன்னார். நான் வந்து இவரை மாதிரி சிகரெட் பிடிச்சிருக்க வேண்டியது. பிடிக்க முடியாமல் போனதுக்குக் காரணம் நாங்க வந்து பாலன் நடிகர்.

லைட்பாய்: மீசையும், சிகரெட்டும் ஒண்ணா வளரணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தவங்க நாங்க. அப்போ சிகரெட் பிடிச்ச போது லைட்பாய் ஒருத்தர் வந்து 'சென்னிய திருப்பிப் போடுவேன். நேத்துத் தான் பார்த்துருக்கு.... அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயேன்னு பார்த்த மாதிரி இருக்கு. இதுல உனக்கு புகை வேறயா...?'ன்னு சொல்லிட்டாரு. அதனால யாருக்கு எதிர்க்கேயும் பிடிக்க முடியாது.

கழிப்பறைல பிடிக்கணுமா?: கடைசியில கழிப்பறைலதான் பிடிக்கணுமான்னு அதையும் விட்டுட்டேன். என்னையும் ஒரு காரணமாக கருதி அந்த 8 மணி நேரமும் வேலை செய்றபோது இவர் சிகரெட் பிடிக்கலைன்னா அதற்கான நன்றியை இவரது மனைவி எங்கிட்ட சொல்லிக்கிட்டு இருப்பாங்க என்கிறார் கமல்.

Next Story