வெறும் சிரிப்பு மட்டும் இல்லாமல் அதனுடன் சிந்தனையையும் கலந்து அடிக்கும் நகைச்சுவை நடிகர்கள் வெகுசிலர்தான் உண்டு. அதில் கலைவாணர் என்எஸ்கேவுக்குத் தான் முதல் இடம். அவருடைய பாணியைப் பின்பற்றி வந்தவர் என்றால் அது காமெடி நடிகர் விவேக் தான்.
அதனால் தான் அவரை சின்னக்கலைவாணர் என்கின்றனர். அவருடைய காமெடிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லாமல் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், மூடநம்பிக்கைகளை அகற்றும் விதத்தில் இருக்கும்.
வயிறுவலிக்கச் சிரிக்க: ஒரு படத்தில் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகளைக்கூட கடுமையான காமெடியால் நம்மை வயிறுவலிக்கச் சிரிக்க வைத்திருப்பார். அந்தவகையில் அவருக்கே பிடித்த காமெடி ஆக்டர் ஒருவர் உண்டு. அது யார்? அவருடைய அல்டிமேட் காமெடி எந்தப் படத்தில் வந்துள்ளதுன்னு பார்க்கலாமா…
நல்ல ரசிகன்தான் நல்ல கலைஞனாக இருக்க முடியும். அப்படிப்பட்ட நகைச்சுவை நடிகர்தான் நடிகர் விவேக். அந்த வகையில் அவரிடம் உங்களுக்குப் பிடிச்ச நகைச்சுவை நடிகர் யாருன்னு கேட்டா மளமளன்னு சொல்வாரு. எத்தனை நகைச்சுவை நடிகர்கள் உண்டோ அத்தனை பேரையும் பட்டியலிட்டு விடுவார்.
சுருளிராஜன்: அவருக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்ல சுருளிராஜனுக்கு ஒரு தனி இடம் உண்டு. எதுக்கு சிரிக்கணும்? ஏன் சிரிக்கணும்னு நம்மை யோசிக்க விடாமல் சிரிக்க வைக்க ஒரு சிலரால் தான் முடியும். அப்படிப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் சுருளிராஜன். அவரைப் பொருத்தவரைக்கும் பஞ்ச் வசனங்கள் எல்லாம் பேச வேண்டாம்.
வாயைத் திறந்தா போதும்: வசனம் பேச வாயைத் திறந்தாலே போதும். மக்கள் சிரிக்கத் தயாராகி விடுவார்கள். எப்படி சிவாஜின்னா வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக்கு வருவாரோ, எம்ஜிஆர்னா மதுரை வீரன் நினைவுக்கு வருவாரோ, அது போல சுருளிராஜன்னா மாந்தோப்புக்கிளியே கஞ்சன் கேரக்டர்தான் நினைவுக்கு வரும்.
அந்தக் கஞ்சன் கதாபாத்திரத்திலே நகைச்சுவையை வாரி வாரி வழங்கிய வள்ளல் சுருளிராஜன்னு ஒரு பத்திரிகைப் பேட்டியிலே விவேக் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…