Categories: latest news

ரஜினி, இளையராஜா மீண்டும் இணையாததுக்கு என்ன காரணம்? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

சூப்பர்ஸ்டார் ரஜினியும், இளையராஜாவும் நண்பர்களாகத் தானே இருக்காங்க. ஆனா ஏன் வீரா படத்துக்கு அப்புறம் இருவரும் இணையவில்லை. திரும்பவும் இருவரும் இணைந்து படங்களில் பணியாற்ற வாய்ப்புகள் இருக்கான்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

80 மற்றும் 90களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பல படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. அவை எல்லாமே சூப்பர்ஹிட் தான். பாடல்களும் பட்டையைக் கிளப்பும் ரகங்களாகவே உள்ளன. இப்போது கேட்டாலும் அதற்கு தனி கேலரியே போடலாம். சினிமாவைத் தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள். இருவருக்குமே ஆன்மிக உணர்வு மேலோங்கி உள்ளது. ரஜினி கூட இளையராஜாவை சாமின்னு தான் அழைக்கிறார்.

கமல், ரஜினி என இருவருடைய படங்களுக்கும் இளையராஜா அப்போது மியூசிக் போட்டுள்ளார். ஆனாலும் சாமி எனக்குக் கொடுத்ததைவிட கமலுக்குத் தான் நிறைய சூப்பர்ஹிட் சாங்ஸ் கொடுத்துள்ளார் அப்படின்னு ரஜினி ஒரு முறை பேசியிருந்தார்.

இசை அமைக்கவில்லை: இளையராஜா ஏன் இப்போதெல்லாம் கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைக்கவில்லை என்று சிலர் நினைப்பதுண்டு. அவர்களின் சந்தேகத்தைப் போக்கும் வகையில் பிரபலம் ஒருவர் இந்தக் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி இருக்கிறார்.

மிகப்பெரிய வியாபாரம்: அவர் சொல்வதைப் பார்த்தால் ‘ஓகோ’ இதுதான் காரணமா என்று நமக்குள் தோன்றும். அந்த வகையில் சினிமா என்பது நட்பை எல்லாம் தாண்டி ஒரு வியாபாரம். அதிலும் ரஜினிகாந்தின் படங்கள் என்பது மிகப்பெரிய வியாபாரம். அதுதான் இந்த இருவரையும் இணைய முடியாமல் இருப்பதற்குக் காரணம்னு நான் நினைக்கிறேன் என்கிறார்.

இளையராஜாவின் இசை: இளையராஜாவைப் பொருத்தவரை அவருக்கு இப்போது 83 வயது. சில சினிமா படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வருகிறார். அப்போது இருந்த ரசிகர்களின் ரசனைக்கு இளையராஜாவின் இசை எடுபட்டது. ஆனால் இன்றைய 2கே கிட்ஸ்கள் அனிருத், தேவி ஸ்ரீ பிரசாத், ஜிவி.பிரகாஷ் என ப்ரஷாக மியூசிக்கை எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான் பெரிய தயாரிப்பாளர்களும்கூட ஒத்துக் கொள்கின்றனர் என்றே தோன்றுகிறது.

பயோபிக்: அதனால்தான் அனிருத்தை பல பெரிய படநிறுவனங்கள் புக் செய்கின்றன. அதே நேரம் இளையராஜா மேடைக்கச்சேரிகளில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பயோபிக் விரைவில் திரைப்படமாக வெளிவர உள்ளது. அதில் தனுஷ் நடிக்க உள்ளார். அதற்கான ப்ரீபுரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

sankaran v

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

1 hour ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

2 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

4 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

7 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

19 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

20 hours ago