இதனாலதான் அஜித் கூட நடிக்கல!.. நெப்போலியன் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!....
தமிழில் ரஜினி கமலுக்கு பிறகு இருபெரும் ஆளுமைகளாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு இருக்கும் கிரேஸ் இதுவரை அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சிவாஜி எம்ஜிஆர் , ரஜினி கமல் , விஜய் அஜித் என்று இரட்டையர்களாக சினிமாவை ஆட்சி செய்தவர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக அந்த மாதிரி இடத்தை யாரும் அடையவில்லை.
ஆனால் இன்று விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்கிறார். அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவர்களுக்கான காலியிடம் அப்படியேதான் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்கள் இடத்தை யாரும் இனி நிரப்ப போவதும் இல்லை. இந்த நிலையில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து வில்லனாக அதன் பிறகு ஹீரோவாக ஜொலித்தவர் நடிகர் நெப்போலியன்.
இப்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அப்பா கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். ஆனால் ஒரு கட்டத்தில் மகனுக்காகவும் மகனின் உடல் நிலைக்காகவும் சினிமா மற்றும் அரசியலை புறந்தள்ளிவிட்டு அமெரிக்காவில் போய் குடியேறிவிட்டார். அங்கு ஐடி கம்பெனி நடத்தியும் விவசாயமும் செய்து நல்ல நிலைமையில் இருக்கிறார் நெப்போலியன்
அவர் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து படங்களில் நடித்து விட்டார். ஆனால் அஜித்துடன் இணைந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அதற்கான காரணத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரை வந்ததே இல்லையாம். அதுவும் சினிமா அரசியல் என பொதுவாழ்க்கையில் இருந்ததனால் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்காது என்பதற்காகவும் அந்த மாதிரி கேரக்டரிகளிலும் நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.
ஆனால் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் போது சில பிரச்சினைகளால் அஜித்துடன் பழக வாய்ப்பு வந்ததும் என்றும் அப்பொழுதுதான் அஜித்துடன் பேசியிருக்கிறேன் என்றும் நெப்போலியன் கூறினார்.