Rajinikanth: தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் ரஜினி. ரஜினியின் படங்கள் அதிக வசூலை கொடுக்கும் என்கிற இமேஜும் திரையுலகில் இருக்கிறது. அதனால்தான் 72 வயதிலும் ஹீரோவாக நடித்து வருகிறார் ரஜினி. அவரின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
லோகேஷ் கூலி: இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் கூலி படமும் வசூலை அள்ளும் என்பதை சொல்லவே தேவையில்லை. ஏனெனில், இந்த படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினி நடிப்பில் வெளிவந்த 95 சதவீத படங்கள் வியாபாரரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்திருக்கிறது.
அதேநேரம், அவரின் சில படங்கள் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தும் இருக்கிறது. அப்படி நடக்கும்போது ரஜினி நஷ்ட ஈடு கொடுத்திருக்கிறார். அல்லது அடுத்த படத்தை அவர்களுக்கு கொடுத்து லாபத்தை பெற்று தந்திருக்கிறார். ரஜினி தயாரித்து நடித்த பாபா திரைப்படம் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையே கொடுத்தது.
ரஜினி சந்தித்த நஷ்டம்: எனவே, யாருக்கு என்ன நஷ்டமோ அந்த தொகையை ரஜினி திருப்பி கொடுத்தார். இதை பலரும் பாராட்டினார்கள். ஏனெனில், திரையுலகில் அப்படி யாரும் பணத்தை திருப்பி கொடுத்தது இல்லை. அதேபோல், அவரின் குசேலன், தர்பார், லால் சலாம் போன்ற படங்களும் வெற்றி பெறவில்லை.
மணிரத்னம் தளபதி: அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம்தான் தளபதி. இந்த படமும் சில வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது. அதில் சில லட்சங்களை ரஜினியே திருப்பி கொடுத்தார். ஒவ்வொரு நடிகரும் தங்களின் இமேஜுக்கு ஏற்றது போல படம் நடிக்க வேண்டும். அதில் தவறு நடந்தால் கண்டிப்பாக படம் தோற்றுவிடும்.
ரசிகர்களுக்கு பிடிக்காத எஜமான்: ஏவிஎம் தயாரிப்பில் ஆர்.வி.உதயகுமார் இயக்கி ரஜினி நடித்து 1993ம் வருடம் வெளியான திரைப்படம்தான் எஜமான். சின்னக்கவுண்டர் படத்தை பார்த்துவிட்டு ‘இதுபோல எனக்கும் ஒரு படம் பண்ணுங்கள்’ என ஆர்.வி.உதயகுமாரிடம் ரஜினியே கேட்டு உருவான திரைப்படம் இது. இந்த படத்தில் ரஜினிக்கு குழந்தை பாக்கியம் இருக்காது.. குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவனெல்லாம் ஆம்பள.. அவனுக்கு என்ன முதல் மரியாதை’ என நெப்போலியன் பேச உடைந்து போவார் ரஜினி.
மாஸ் ஹீரோ இமேஜை வைத்திருக்கும் ரஜினி அப்படி நடித்தது அவரின் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. அதனால், அந்த படம் பாக்ஸ் ஆபிசில் பெரிய வெற்றியை பெறவில்லை என வலைப்பேச்சி அந்தணன் ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…