Rajinikanth: பெங்களூரில் பேருந்து நடத்துனராக இருந்து நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து திரைப்படக்கல்லூரியில் படித்து பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து சினிமாவில் நடிக்க துவங்கியவர்தான் ரஜினி. துவக்கத்தில் கமலுடன் இணைந்து அவரின் நண்பராக பல படங்களிலும் நடித்தார்.
அதன்பின் கமல், ரஜினி இருவரும் பேசி தனித்தனியாக நடிக்க துவங்கினார்கள். ரஜினி முதன் முதலாக பைரவி படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வசூல் மன்னனாக மாறி ஒரு கட்டத்தில் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். அவருக்கென அதிக ரசிகர்களும் உண்டானார்கள்.
ரஜினி கமல்: எம்.ஜி.ஆருக்கு பின் அதிக ரசிகர்களை கொண்டவராகவும் மாறினார் ரஜினி. ஒருபக்கம் கமலும் ரஜினிக்கு டஃப் கொடுத்துக்கொண்டே வந்தார். கமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தால் ரஜினி பக்கா கமர்ஷியல் படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இந்நிலையில், 80களில் கமல், ரஜினி இருவருடனும் பல படங்களிலும் நடித்த நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஊடகம் ஒன்றில் பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
எனக்கு கமலுடன் அதிக நெருக்கம் உண்டு. இருவரும் ‘வாடா போடா’ என பேசிக்கொள்வோம். ஏனெனில் 16,17 வயதிலிருந்தே நாங்கள் நண்பர்கள். அவருடன் பல படங்களிலும் நடித்திருக்கிறேன். அவருடன் நடித்த காமெடி நடிகர்களில் பெஸ்ட் நான்தான் என அப்போதே சொல்வார்கள். ரஜினியை ‘புவனா ஒரு கேள்விகுறி’ ஷூட்டிங்கில்தான் பார்த்தேன்.
ரஜினியின் திறமை: ஓரத்தில் அமைதியாக நின்று கொண்டிருப்பார். சிவக்குமார் என்னிடம் ‘மைசூர்ல இருந்து ஒருத்தன் வந்திருக்கான். யார்கிட்டயும் பேசமாட்டான். காலையில போயிடுவான். அவன்கிட்ட என்னமோ இருக்கு’ என சொன்னார். ரஜினி நடிப்பு கல்லூரியில் படித்தபோது என் அப்பா அங்கு புரபஷராக இருந்தார். ரஜினியை பற்றி பேசும்போது ‘அவன்கிட்ட டிசிப்ளினே இருக்காது. கிளாசுக்கு ஒழுங்கா வரவும் மாட்டான். ஆனா, நடிச்சி காட்ட சொல்லும்போது என்னமோ பண்ணி எல்லாத்துக்கிட்டயும் கைத்தட்டல் வாங்கிடுறான். அவன்கிட்ட ஏதோ இருக்கு’ என சொல்லுவார்.
முதல்பட வாய்ப்பு: ஒருமுறை பாலச்சந்தரை சீப் கெஸ்ட்டாக என் அப்பா அழைத்து வந்தார். அப்போதுதான் பாலச்சந்தர் ரஜினியை பார்த்தார். அதன் தொடர்ச்சிதான் அவர் அபூர்வ ராகங்கள் படமெடுத்தபோது ஒரு வேடத்தில் ரஜினிக்கு வாய்ப்பு கொடுத்தார்’ என ஒய்.ஜி.மகேந்திரன் கூறினார்.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…