உன்னாலதான்யா படம் ரிலீஸ் ஆகல!. சந்தானத்திடம் கோபப்பட்ட விஜய்!...

by MURUGAN |   ( Updated:2025-05-14 06:45:53  )
santhanam vijay
X

திரைப்பட உலகில் எப்போதும் சில படங்கள் சில பிரச்சனைகளை கொண்டு வரும். ஒரு சின்ன வசனம், ஒரு கதாபாத்திரத்தின் பெயர், ஒரு காட்சி கூட ஏழரையை இழுத்து வரும். இப்படி நடக்கும் என இயக்குனரே நினைத்திருக்க மாட்டார். ஆனால், நடந்துவிடும். சில சமயம் பிரச்சனை சென்சார் போர்ட் அதிகாரிகள் மூலம் வரும்.

ஒரு குறிப்பிட்ட வசனம் அல்லது காட்சியை தணிக்கை குழு அதிகாரிகள் நீக்க சொல்வார்கள். ஆனால், இயக்குனர் முடியாது என்பார். அதுவும் சர்ச்சையான ஒரு விஷயத்தை கதையாக எழுதி ஒரு இயக்குனர் படமெடுத்தால் சென்சாரில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மறுபக்கம் சென்சார் ஆகி தியேட்டரில் வெளியான படங்களும் பிரச்சனையை சந்திக்கும்.

இதில் அதிகம் சிக்கியது விஜயின் படங்கள்தான். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய், அமலாபால், சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்து 2013ம் வருடம் வெளியான படம்தான் தலைவா. இந்த படத்தின் போஸ்டரில் தலைப்புக்கு கீழ் ‘Time To Lead' என கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது.

அப்போது விஜய் தனது மக்கள் இயக்கும் மூலம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். எனவே, அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என பரவலாக பேசப்பட்டது. தலைவா போஸ்டர் விவகாரம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கோபப்படுத்தியது. மேலும், சிலர் தலைவா படத்திற்கு மிரட்டல் விடுத்தனர். ஆனால், படத்திற்கெல்லாம் பாதுகாப்பு போட முடியாது என ஜெயலலிதா சொல்லிவிட்டார்.


இதனால் திட்டமிட்ட நாளில் தலைவா படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அப்படத்தின் தயாரிப்பாளர் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் 2 நாட்கள் கழித்து அப்படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தில் நடித்தது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சந்தானம் ‘தலைவா படத்தில் ‘அரசியலுக்கு வர எல்லா தகுதியும் உனக்கு இருக்கு’ என ஒரு வசனம் பேசினேன். அது பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதுபற்றி விஜய் சாரிடம் கேட்டபோது ‘உன்னாலதான்யா படம் ரிலீஸ் ஆகல’ என சொன்னார். ‘நான் என்ன பண்ணேன்?’ எனக்கேட்டேன்.

நான் பேசிய அந்த வசனத்தை சொல்லி ‘நீ சாதாரணமா பேசிட்டு போயிட்ட’ அது பத்திக்கிட்டு எரியுது’ என சொன்னார். விஜய் அரசியலுக்கு வருவது பற்றி சினிமாவில் முதலில் பேசியது நான்தான்’ என சொல்லியிருக்கிறார். அதேபோல், சர்கார் படத்தில் வரலட்சுமிக்கு வைத்த பெயரும் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தி தியேட்டரில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றி விஜய் பேசிய வசனத்திற்காக அவரிடம் ஐடி ரெய்ட் எல்லாம் நடத்தப்பட்டது. இந்த மொத்த சம்பவங்களாலும் ஏற்பட்ட கோபத்தில்தான் விஜய் அரசியலுக்கு வர ,முடிவு செய்தார் எனவும் சொல்லப்படுகிறது.

Next Story