35 ஆண்டுகள் ஆகியும் மாஸ் குறையாத புலன்விசாரணை... விஜயகாந்துக்காக 2 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனர்

by Sankaran |
pulan visaranai
X

மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஆர்.கே.செல்வமணி. ஆட்டோ சங்கரின் கதை தான் இது. கிட்னி திருட்டு, சிசிடிவி கேமரா, ஸ்லோ மோஷன் காட்சிகள், கிளைமாக்ஸ் பைட் என காட்சிக்குக் காட்சி ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்திருப்பார் இயக்குனர்.

கிளைமாக்ஸ் பைட்: படத்தில் வில்லனாக வரும் ஆனந்தராஜ் மிரட்டி இருப்பார். இவர் ஆட்டோ சங்கர் கேரக்டரில் நடித்திருந்தார். சரத்குமார் தான் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் துப்பாக்கியில் இருந்து வரும் குண்டு சிறுமியின் இதயத்தை ஸ்லோமோஷனில் துளைத்த காட்சி பெரிதும் பேசப்பட்டது. டெக்னாலஜியே இல்லாத காலகட்டத்தில் அவ்வளவு தத்ரூபமாக ஆர்.கே.செல்வமணி எடுத்திருந்தார்.

இளையராஜாவின் இசையில் 2 பாடல்கள் மட்டுமே உள்ளன. டூயட் சாங் கிடையாது. விஜயகாந்துக்கு ஜோடி கிடையாது. 10 படங்களுக்குப் பிறகு ஏதாவது ஒரு பெரிய ஹிட் கிடைக்காதா என்று ஏங்கிய விஜயகாந்துக்கு இந்தப் படம் மெகா ஹிட் கொடுத்தது.

ரத்தத்தை உறையச் செய்யும் திகில்: இந்தப் படத்தின் இடைவேளை காட்சி ரத்தத்தை உறையச் செய்யும் திகில் நிறைந்தது. சுவரில் மனிதர்களைக் கொன்று தெரியாத அளவு பூசி விடுவார்கள். படத்தில் கருப்பு மோப்ப நாய் கூட நம்மைப் பயமுறுத்தி விடும்.


படத்தின் இடைவேளையின்போது தான் விஜயகாந்தே வருவார். இப்படி பல புது விஷயங்களை ஆர்.கே.செல்வமணி படத்தில் கொண்டு வந்திருந்தார். இது அப்போதைய ரசிகர்களைக் கொண்டாட வைத்தது. இப்போது பார்த்தாலும் அதே பிரமிப்பு நமக்கும் வரும்.

2 வருடம்: ஆரம்பத்தில் இந்தப் படத்துக்காக ராவுத்தரிடம் கதை சொல்ல சென்றுள்ளார் ஆர்.கே.செல்வமணி. ஆனால் விஜயகாந்த் 2 வருடம் பிசி என்று திருப்பி அனுப்பி விட்டாராம். அப்புறம் கொஞ்சமும் துவண்டு போகாமல் தன்னுடைய படக்காட்சிகளை ஓவியங்களாக வரைந்து கொண்டார் இயக்குனர்.

அதை ராவுத்தரிடம் சென்று கொடுக்க அதைப் பார்த்ததும் தான் அவருக்குப் பிடித்துவிட்டதாம். உடனே ஓகே சொல்லி விட்டாராம். அப்படி உருவானதுதான் இந்த கிரைம் திரில்லர் படம்.

பிரமிப்பான போஸ்டர்: விஜயகாந்த் நீளமான கோட் அணிந்து கையில் நாயைப் பிடித்தபடி இருந்த போஸ்டர், கட் அவுட்கள் அப்போது பிரமிப்பை ஏற்படுத்தின. விஜயகாந்தின் 100வது படத்தை இயக்கும் வாய்ப்பும் இவருக்கே வந்தது. அதுதான் கேப்டன் பிரபாகரன். எந்த ஒரு பெரிய ஹீரோவுக்கும் 100 வது படம் ஓடாத நிலையில் கேப்டன் விஜயகாந்துக்கு மட்டும் மெகா ஹிட்டாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

புலன் விசாரணை: 1990ம் ஆண்டு பொங்கல் அன்று ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான படம் புலன் விசாரணை. விஜயகாந்த், ரூபினி, ராதாரவி, நம்பியார், ஆனந்த்ராஜ், சரத்குமார், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இது விஜயகாந்த்துக்கு சொந்தப் படம்.

Next Story