90களில் வசூலில் கல்லா கட்டிய டாப் 25 படங்கள்... முதலிடம் அவரு படமா?

by SANKARAN |   ( Updated:2025-07-06 07:32:57  )
vijayakanth, kamal, rajni
X

90களில் தமிழ்த்திரை உலகில் அதிகளவு கலெக்ஷனை அள்ளிய படங்களில் முதல் 25 இடங்களைப் பெற்றவை எவை என்று பார்ப்போமா... லிஸ்ட் இதோ...

25வது இடத்தில் இருப்பது உலகம் பிறந்தது எனக்காக படத்தில் சத்யராஜ் 2 வேடங்களில் நடித்துள்ளார். எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். அதிகபட்சமாக 50லட்சம் வசூல் ஆகியுள்ளது. 24வது இடத்தில் அவசர போலீஸ் ௧௦௦. பாக்கியராஜ் படம். இது 55 லட்சம் வசூல். 23வது இடத்தில் ராஜா கைய வெச்சா. படத்தில் பிரபு, ரேவதி, கவுதமி உள்பட பலர் நடித்துள்ளனர். சரத்குமார் தான் வில்லன். இது 60 லட்சம் கலெக்ஷன் பண்ணியது. 22வது இடத்தில் ஊருவிட்டு ஊருவந்து. படத்தில் ராமராஜன், கவுதமி, செந்தில், கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். கங்கை அமரன் இயக்கியுள்ளார். 60 லட்சம் வசூலை அள்ளியுள்ளது.

21வது இடத்தில் உள்ளது கார்த்திக் நடித்த இதயதாமரை. ரேவதி கதாநாயகி. இந்தப் படம் 65 லட்சத்தை வசூலித்துள்ளது. 20வது இடத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இயக்கிய படம் புதுப்பாடகன். அமலா, சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 75 லட்சம் கலெக்ஷன் பெற்றுள்ளது.

19வது இடத்தில் இருப்பது துர்கா. நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். பேபிஷாலினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ராமநாராயணன் இயக்கியுள்ளார். 75 லட்சத்தை வசூலித்த படம்.

18வது இடத்தில் மனைவி ஒரு மாணிக்கம் என்ற படம் உள்ளது. அர்ஜூன், ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். 80 லட்சம் கலெக்ஷன் பெற்றுள்ளது. சந்திரமுகி படமே இதைப் பார்த்துத் தான் காபி பேஸ்ட் பண்ணினாங்களோன்னு தோணும். 17வது இடத்தில் சத்யராஜ், கவுதமி, சரத்குமார், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்த படம் வேலை கிடைச்சிடுச்சு. 85 லட்சம் வசூல் கொடுத்த படம். 16வது இடத்தில் பிரபு, ரேவதி நடித்த அரங்கேற்ற வேளை உள்ளது. பாசில் இயக்கியுள்ளார். இந்தப் படம் 90 லட்சம் கலெக்ஷனைப் பெற்றுள்ளது.


15வது இடத்தில் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் முதலாவதாக வந்த படம் புரியாத புதிர். ரகுவரன், ரேகா, நிழல்கள் ரவி, சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். 1.1கோடி கலெக்ஷனை அள்ளியது. 14வது இடத்தில் மனோஜ்குமார் இயக்கத்தில் ராம்கி, நிரோஷா நடித்த படம் மருதுபாண்டி. 1.2 கோடி கலெக்ஷனை அள்ளியது.

14வது இடத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் இந்திரன் சந்திரன். கமல் இரட்டை வேடம். விஜயசாந்தி ஹீரோயின். 1.2 கோடி கலெக்ஷன். 13வது இடத்தில் மது இயக்கத்தில் மம்முட்டி, அமலா, சரத்குமார் உள்பட பலர் நடித்த படம் மௌனம் சம்மதம். இந்தப் படத்தின் கலெக்ஷன் 1.3கோடி.

12வது இடத்தில் ராதா பாரதி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படம் வைகாசி பொறந்தாச்சு. தேவா இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள். இது பிரசாந்துக்கு முதல் படம். 1.5கோடி வசூல். 11வது இடத்தில் கேளடி கண்மணி வசந்த் இயக்கத்தில் வெளியான முதல் படம். எஸ்.பி.பி., ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். 2 கோடி வசூலை அள்ளியது. டாப் 10ல் உள்ள படம் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த அதிசய பிறவி. கலெக்ஷன்ல 2.2 கோடி.

9வது இடத்தில் இருப்பது இணைந்த கைகள். இயக்கம் என்.கே.விஸ்வநாதன். கதை ஆபாவாணன். ராம்கி, அருண்பாண்டியன் இணைந்து நடித்த படம். நாசர் வில்லன். ஸ்ரீவித்யா, நிரோஷா உள்பட பலர் நடித்துள்ளனர். 2.5கோடி கலெக்ஷன்.

டாப் 8ல் உள்ள படம் நடிகன். சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். பி.வாசு இயக்கிய காமெடி படம். 2.6கோடி கலெக்ஷன். டாப் 7ல் உள்ள படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்த அஞ்சலி. ரகுவரன், பிரபு, பேபி ஷாமிலி உள்பட பலர் நடித்துள்ளனர். 2.75 கோடி கலெக்ஷன்.

டாப் 6ல் வெளியானது புதுவசந்தம். விக்ரமன் இயக்கியுள்ளார். முரளி, சித்தாரா உள்பட பலர் நடித்துள்ளனர். 2.8 கோடி கலெக்ஷன். டாப் 5ல் உள்ள படம் கார்த்திக் நடித்த கிழக்கு வாசல். ஆர்.வி.உதயகுமார் இயக்கியுள்ளார். ரேவதி, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். 3 கோடிக்கு மேல் கலெக்ஷன்.


டாப் 4ல் விஜயகாந்த் நடித்த சத்ரியன். கே.சுபாஷ் இயக்கியுள்ளார். பானுப்பிரியா, ரேவதி, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். 4 கோடிக்கு மேல் கலெக்ஷன். டாப் 3ல் ரஜினி நடித்த பணக்காரன். பி.வாசு இயக்கியுள்ளார். கவுதமி, ஜனகராஜ், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். 4.75 கோடி கலெக்ஷன்.

டாப் 2ல் உள்ளது விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை. ஆர்.கே.செல்வமணி இயக்கிய முதல் படம். 4.78 கோடிவரை வசூல். டாப் 1ல் உள்ளது கமல் 4 வேடத்தில் நடித்த மைக்கேல் மதன காமராஜன். குஷ்பூ, ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். இந்தப் படம் 5 கோடிக்கு மேல் கலெக்ஷனை அள்ளியுள்ளது.

Next Story