இவ்ளோ கேவலமான படத்துல ஏன் நடிச்ச?!.. கமலை திட்டிய நண்பர்கள்!.. அந்த சூப்பர் ஹிட் படமா?!...

by Murugan |
kamalhaasan
X

Kamalhaasan: 4 வயது முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய கலைப்பயணம் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வயதிலும் விக்ரம் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு கல்கி, இந்தியன் 2, தக் லைப் என ஓடிக்கொண்டிருக்கிறார்.

அடுத்து இந்தியன் 2, ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு - அறிவு இயக்கத்தில் ஒரு படம் என ஓடவிருக்கிறார். விக்ரம் பட ஹிட்டுக்கு பின் சுமார் 150 கோடி சம்பளம் கேட்கும் நடிகராக கமல் மாறியிருக்கிறார். கமலுக்கு இரண்டு வகையான சினிமாவில் நடிப்பார். ஒன்று வெற்றி பெற்று வசூலை அள்ளும் ஜனரஞ்சக கமர்ஷியல் திரைப்படம்.


கலை சினிமா: மற்றொன்று கலை சினிமா. அதாவது, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக ஆசைப்படும் அவரின் முயற்சி. ராஜ பார்வை, நாயகன், குணா, குருதிப்புனல், மகாநதி, தேவர் மகன், ஹே ராம், அன்பே சிவம், விருமாண்டி, விஸ்வரூபம் இது எல்லாமே அந்த வகையான முயற்சிகள்தான்.

ஆரம்பம் முதலே கமலின் விருப்பம் இது போன்ற படங்கள்தான். ஆனால், தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடம் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக அவருக்கு விருப்பமே இல்லாத பல கமர்ஷியல் படங்களில் நடித்திருக்கிறார். அதேநேரம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கலை சினிமாவை பண்ண அவர் தவறியதே இல்லை. அதேநேரம், அதில் பெரும்பாலானவை அவர் தயாரித்த படங்கள்தான்.


சகலகலா வல்லவன்: 80களில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கமல் பல கமர்ஷியல் படங்களில் நடித்தார். அதில் ஒரு படம்தான் சகலகலா வல்லவன். ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் இது. எம்.ஜி.அரின் பெரிய இடத்து பெண் கதையை அப்படியே எடுத்திருப்பார்கள். இதில் வரும் ‘நிலா காயிது’ பாடல் காம ரசத்தை சொட்டும் பாடலாக இப்போதும் பலரால் ரசிக்கப்படுகிறது.

அதேபோல், இந்த படத்தில் வரும் ‘இளமை இதோ இதோ’ பாடல் இப்போதும் ஆங்கில புத்தாண்டு அன்று எல்லா இடத்திலும் ஒலிக்கிறது. ஆனால், இந்த படத்தை பார்த்த கமலின் நண்பர்கள் ‘இது மாதிரி ஒரு படத்துல நீ ஏன் நடிக்கிற?.. இதுக்கு நீ வேற வேலையே செய்யலாம்’ என்கிற ரேஞ்சுக்கு கமலை திட்டியிருக்கிறார்கள். ஆனால், அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.

இந்த படத்திற்கு கதை எழுதி தயாரித்த பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘அப்போது கமல் சார் ஒரு கிளாஸ் நடிகராக பார்க்கப்பட்டார். அவரை கிராமபுறங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அந்த படத்தை எடுத்தோம் அந்த படம்தான் கிளாஸ் நடிகராக இருந்த கமலை மாஸ் நடிகராக மாற்றியது’ என சொல்லியிருக்கிறார்.

Next Story