கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்!. அடுத்த நாள் நடந்த சம்பவம்!..
MGR: சிறு வயது முதல் நாடகங்களில் நடிக்க துவங்கி சுமார் 30 வருட நாடக அனுபவத்தை பெற்றவர் எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்ததை விட பல அற்புதமான வேடங்களில் அவர் நாடகங்களில் நடிக்கும் போது கிடைத்தது. அப்போதுதான் எம்.ஆர்.ராதா, தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா போன்றவர்கள் சினிமாவில் நடிக்க துவங்கினார்கள்.
ஹீரோ வாய்ப்பு: எனவே, எம்.ஜி.ஆருக்கும் அந்த ஆசை வந்தது. எனவே, வாய்ப்பு தேடினார். பல அவமானங்களையும் சந்தித்தார். 10 வருடங்கள் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. அதன்பின் 1947ம் வருடம் ராஜகுமாரி அப்டம் மூலம் ஹீரோவாக மாறினார் எம்.ஜி.ஆர்.
சிறு வயது முதலே வறுமை, கஷ்டங்களை பார்த்து வளர்ந்ததால் எம்.ஜி.ஆர் எப்போது எங்கேயும் பந்தா காட்டியது இல்லை. எதுவும் நிரந்தரமில்லை என்கிற மனநிலையில்தான் அவர் வாழ்ந்தார். அதோடு, மக்கள் நமக்கு கொடுத்த பணத்தை கஷ்டப்படும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்கிற ஈகை குணமும் அவரிடம் இருந்தது. எல்லோருக்கும் அள்ளி அள்ளி கொடுத்தார்.
வள்ளல் குணம்: அதனால்தான் அவரை மக்கள் வள்ளல் என அழைத்தார்கள். எம்.ஜி.ஆரிடம் சென்று உதவி கேட்டால் கிடைக்கும் என்கிற நிலை அப்போது இருந்து. கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக பலரும் அவரிடம் சென்று உதவி பெற்றிருக்கிறார்கள். ஒருபக்கம், எல்லோருடனும் எளிமையாக பழகும் குணமும் எம்.ஜி.ஆருக்கு இருந்தது.
சாதி, மத, மொழி வேறுபாடு இன்றி எல்லோருடனும் அன்பாக பேசும், நடந்துகொள்ளும் சுபாவம் கொண்டவராகவே அவர் கடைசி வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பார்ப்போம். என் அண்ணன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பை பலரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த ஒரு கழிவு நீர் தொட்டியில் ஒரு சிறுமி விழுந்துவிட்டார்.
உயிரை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்: அந்த சிறுமையை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இதைக்கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். ஒரு துப்புரவு தொழிலாளியை அழைத்து சிறுமியை மேலே தூக்கி காப்பாற்றினார். அடுத்தநாள் காலை எம்.ஜி.ஆர் தங்கியிருந்த ஹோட்டலின் முன்பு ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் நின்றார்கள். அவர்கள் எம்.ஜி.ஆரை பார்க்கவே வந்திருந்தார்கள்.
எம்.ஜி.ஆர் அவர்களிடம் சென்றபோது அவர் காப்பாற்றிய சிறுமியின் தந்தை தனது மகளின் உயிரை காப்பாற்றியதற்காக அவரின் காலில் விழுந்து நன்றி சொன்னார். துப்புரவு தொழிலாளர் சங்க தலைவரின் கையில் ஒரு மாலை இருந்தது ‘இந்த மாலையை நீங்கள் வாங்கிக் கொள்வீர்களா?’ என அவர் கேட்க, எம்.ஜி.ஆரோ ‘நீங்களே போட்டுவிடுங்கள்’ என சொல்லி தலையை குனிந்து காட்ட அவர்கள் மகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆருக்கு மாலை போட்டார்கள்.
அவர்கள் சென்றபின் அருகிலிருந்த நடிகர் எம்.ஜி.அரிடம் ‘என்ன சார் அவர்கள் கொடுத்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு கையிலும் எடுத்து வருகிறீர்களே’ என கேட்க, அவர் எதனால் அப்படி கேட்கிறார் என புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் ’மாலை நாறவில்லையே. வாசமாகத்தான் இருக்கிறது’ என பதிலடிகொடுத்தார்.