சௌந்தர்யா மரணத்தில் அந்த நடிகருக்கு தொடர்பா?!.. ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் இதுவா?!..

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சௌந்தர்யா. நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் கார்த்தி ஹீரோவாக நடித்த பொன்னுமணி படம் மூலம் நடிக்க துவங்கினார். அழகாக இருப்பதோடு, நன்றாக நடிப்பதால் இவருடன் நடிக்க பல நடிகர்களும் ஆசைப்பட்டனர். பல இயக்குனர்களும் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைத்தனர்.
மேலும், ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம், விஜயகாந்துடன் தவசி, கமலுடன் காதலா காதலா போன்ற படங்களிலும் நடித்தார். தெலுங்கில் உருவாகி தமிழில் ஹிட் அடித்த அம்மன் படத்திலும் நடித்திருந்தார். மிகவும் இன்னசண்டான முகம் கொண்ட சௌந்தர்யா அபாரமாக நடிக்கும் ஆற்றல் கொண்டவர். தமிழ் மட்டுமின்றி பல தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

90களில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது அரசியலில் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்து தேர்தல் பிரச்சாரங்களையும் செய்தார். 2004ம் வருடம் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் பெங்களூரில் இருந்து கரீம் நகருக்கு போனபோது இவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சௌந்தர்யா மரணமடைந்தார்.
இந்நிலையில், அவரின் மரணம் பற்றி ஆந்திராவை சேர்ந்த ஒருவர் பீதி கிளப்பியிருக்கிறார். ஆந்திரா போலீசுக்கு அவர் எழுதியுள்ள புகாரில் ‘ஹைதரபாத் ஷாம்ஷாபாத்தில் உள்ள ஜல்லேபள்ளியில் சவுந்தர்யா ஆறு ஏக்கர் நிலத்தில் ஒரு பெரிய விருந்தினர் மாளிகையை கட்டினார். அதன் இப்போதைய மதிப்பு 100 கோடி வரும். அந்த மாளிகையை தனக்கு விற்குமாறு தெலுங்கு நடிகர் மோகன்பாபு சவுந்தர்யாவிடம் கேட்டார். ஆனால், சவுந்தர்யா அதற்கு சம்மதிக்கவில்லை.

மேலும், சவுந்தர்யாவின் சகோதரரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த மோகன்பாபுதான் சவுந்தர்யாவின் மரணத்திற்கு காரணமாக இருந்தார். எனவே, போலீசார் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மோகன் பாபு விளக்கமளிப்பாரா என்பது தெரியவில்லை. மேலும், இது தொடர்பாக போலீசார் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.