படத்துல எனக்கு சம்பளமே இல்ல!.. போட்ட காசு வந்தா போதும்!. ஃபீல் பண்ணி சொன்ன கமல்!..
Kamalhaasan: 4 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். சிறு வயது முதலே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். சினிமாவில் ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்தது. சின்ன சின்ன வேடங்கள், நடன இயக்குனர், உதவி இயக்குனர் என பல வேலைகளை பார்த்திருக்கிறார்.
உதவி நடன இயக்குனராக இருந்தபோது பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து நடிகராக மாறினார். பாலச்சந்தரின் இயக்கத்தில் பல படங்களிலும் நடித்து தன்னை மெருக்கேற்றிக்கொண்டார். ஒருபக்கம், உலக சினிமாக்களையும் பார்க்க துவங்கினார். அப்போதுதான் தமிழ் சினிமா எந்த இடத்தில் இருக்கிறது? இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது? என்பது அவருக்கு புரிந்தது.
நம் கையில் சினிமா இருக்கும்போது முடிந்தவரை எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்கிற ஆவலும், ஆதங்கமும் அவரிடம் இருந்தது. ஒருகட்டத்தில் அவரே தயாரிப்பாளராக மாறி தனக்கு பிடித்தமான படங்களில் நடிக்க துவங்கினார். நாயகன், அபூர்வ ராகங்கள், மைக்கேல் மதன காமராஜன், குருதிப்புனல், குணா, மகாநதி, தேவர் மகன் என பல முக்கிய படங்களை கொடுத்தார்.
சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் மட்டுமே முதலீடு செய்யும் ஒரே நடிகராக கமல் மட்டுமே இருந்து வருகிறார். இது தவிர வேறு எந்த தொழிலும் கமலுக்கு தெரியாது. அவரின் மூச்சி, சிந்தனை எல்லாமே சினிமாவாகவே இருக்கிறது. இந்த வயதிலும் விக்ரம் எனும் சூப்பர் ஹிட் படத்தை அவரால் கொடுக்க முடிகிறது.
கமலுடன் பல திரைப்படங்களில் நடித்தவர் நாசர். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘கமல் சாரின் 100வது படம் ராஜபார்வை. அதுதான் அவர் முதலில் தயாரித்த படம். அவரே தயாரிப்பாளர் என்பதால் தனது இமேஜை பில்டப் செய்யும் ஒரு கதையில் நடித்திருக்க முடியும். ஆனால், அவர் அதை செய்யாமல் கண் பார்வை இல்லாதவராக நடித்தார். அவர் மற்ற நடிகர்கள் போல் இல்லை.
குருதிப்புனல் உருவான போது ‘இந்த படத்தில் எனக்கு சம்பளம் இல்லை. படத்தில் பாடல்களும் இல்லை. எனவே, நான் போட்ட காசு வந்தாலே எனக்கு போதும். அதற்கு மேல் ஒரு ரூபாய் வந்தாலும் அதுவே என் லாபம்’ என சொன்னார்’ என சொல்லியிருந்தார்.