கட் பண்றேனு என்னுடைய மொத்த சீனையும் தூக்கிட்டாங்க.. ரஜினி படம் பற்றி பார்த்திபன் வேதனை
பொன்விழா ஆண்டை நோக்கி ரஜினி: ரஜினி படத்தில் நடிக்க வைத்து பின் அந்தப் படத்தில் இருந்து தன்னுடைய மொத்த சீனையும் கட் பண்ணிட்டாங்க என பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியதுதான் இப்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினி. இந்த வருடம் அவருடைய ஐம்பதாவது பொன்விழா ஆண்டு. அதனால் தொடர்ந்து ரஜினியை பற்றி பல செய்திகள் சோசியல் மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது.
புதுக்கவிதை படத்தில் ஏற்பட்ட அனுபவம்: பொதுவாக ரஜினி என்றாலே ஒரு ஆச்சரியத்துடன் பார்க்கும் மனிதர். ஆன்மீகம், தியானம், வாழ்க்கையை வித்தியாசமாக பார்க்கக் கூடிய நபர், பழக்கவழக்கங்களில் வித்தியாசம் என மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார். அவருடைய பயோபிக் எடுத்தால் கூட இப்போதுள்ள இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் ரஜினி நடித்த புதுக்கவிதை படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பார்த்திபன் கூறியிருக்கிறார்.
அவமானமாக போன பார்த்திபன்: அந்தப் படத்தில் பார்த்திபன் ஒரு ஐந்து சீனுக்கும் மேல் நடித்திருந்தாராம். அந்தப் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் பார்த்திபன் திருச்சியில் இருந்திருக்கிறார். படம் பார்க்க பார்த்திபனை அவரது தம்பி அழைத்தாராம். அதற்கு பார்த்திபன் ‘அந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன். மக்கள் என்னை பார்த்தால் கூட்டமாக கூடி விடுவார்கள். அதனால் நீ இப்போ மேட்னி ஷோவுக்கு போ, நான் ஈவினிங் ஷோவில் பார்த்துக் கொள்கிறேன்’ என சொல்லி அனுப்பி விட்டாராம்.
மேட்னி ஷோ பார்த்திவிட்டு வந்த தம்பியிடம் என்ன படம் நன்றாக இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவரது தம்பி படம் சூப்பராக இருக்கிறது. ஆனால் படத்துல நீதான் இல்லை. ஒரு வேளை ஈவினிங் ஷோவில் இருக்கிறீயானு பார்த்துவிட்டு சொல்லு என கூறினாராம். ஏனெனில் எடிட்டிங்கில் பார்த்திபன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் நீக்கியிருக்கிறார்கள்.
இதை பற்றி பார்த்திபன் சொல்லும் போது ‘இப்போது இதை கேட்கும் போது சிரிப்பாக இருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் பட வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த நேரம். அப்போது ஏற்பட்ட வலியை சொல்லி மாளாது’ என பார்த்திபன் கூறினார். புதுக்கவிதை படத்தை எஸ்.பி. முத்துராமன் இயக்க விசு அந்தப் படத்திற்கு திரைக்கதை அமைந்திருந்தார். படத்தில் ரஜினி, ஜோதி, சரிதா என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.