நானும் ராஜாவும் விடிய விடிய குடிப்போம்!. ஆனா திடீர்னு ஒருநாள்!.. ரஜினி சொன்ன பிளாஷ்பேக்!

by MURUGAN |
நானும் ராஜாவும் விடிய விடிய குடிப்போம்!. ஆனா திடீர்னு ஒருநாள்!.. ரஜினி சொன்ன பிளாஷ்பேக்!
X

அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக முன்னணி இசையமைப்பாளராக மாறினார். 80களில் ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் எல்லா படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர்.

தங்களின் படம் ஹிட் ஆக வேண்டுமெனில் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதில் ரஜினி, கமல், மோகன் போன்றவர்கள் உறுதியாக இருந்தனர். இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமில்லை. மிகவும் விரைவாக பாடல்களுக்கான மெட்டை உருவாக்கக் கூடியவர். குணா படத்தின் பாடல்களுக்கு அவர் எடுத்துக்கொண்டது 2 மணி நேரம்தான். சின்னத்தம்பியில் 10 பாடல்களுக்கு அவர் எடுத்துக்கொண்டது 45 நிமிடம்தான்.


சினிமாவில் இளையராஜாவுக்கும், ரஜினிக்கும் இடையே ஒரு மரியாதை கொண்ட நட்பு இருக்கிறது. 80,90களில் ரஜினியின் எல்லா படங்களுக்கும் இளையராஜாதான் இசை. ரஜினிக்கு பல அற்புதமான பாடல்களை கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஆனால், பாட்ஷா படத்தில் சம்பளம் விஷயத்தில் இளையராஜா கோபப்பட அந்த படத்திற்கு தேவா இசையமைத்தார்.

அந்த படம் ஹிட் அடிக்கவே ரஜினி தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் என மாறிவிட்டார். கடந்த 30 வருடங்களாக ரஜினியின் எந்த படத்திற்கும் இளையராஜா இசையமைக்கவில்லை. அதேநேரம் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதையும், அன்பும் அப்படியே இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது ரஜினி இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அவரை சந்திப்பதும் உண்டு.


இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அமிதாப்பச்சனுடன் நடந்த ஒரு உரையாடலில் பேசிய ரஜினி ‘நானும் இளையராஜாவும் விடிய விடிய குடித்த நாட்கள் உண்டு. ஆனால், திடீரென ஒரு நாள் அவர் ஆன்மிகத்தில் தன்னை முழுமையாக செலுத்தி மொத்தமாக மாற்றிக்கொண்டார். அவரின் உடை, பேச்சு எல்லாம் மாறிவிட்டது. ராஜா சார் என அழைத்த நான் ‘சாமி’ என அழைக்க துவங்கிவிட்டேன்’ என பேசியிருக்கிறார்.

இளையராஜா எப்போது ஆன்மிகத்தில் பற்று கொண்டவராக மாறினாரோ அப்போது முதலே வெள்ளை நிற உடையை மட்டுமே அணிந்து வருகிறார். அவரிடம் எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் அவர் கண்டு கொள்வது இல்லை. ‘வாழ்கையில் ஒன்றுமே சாதிக்காத நீ சாதித்த என்னை திட்டுகிறாய்’ என்பதுதான் அவரின் தத்துவமாக இருக்கிறது.

Next Story