ரஜினி சார் இப்படி பண்ணுவார்னு நான் நினைக்கவே இல்ல!.. விக்ரமன் சொல்றத கேளுங்க!...

by Murugan |   ( Updated:2024-12-21 04:01:05  )
vikraman
X

vikraman

Rajinikanth: புது வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரமன். வன்முறை இல்லாத அழகான காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளை கொண்ட மெலடியான திரைப்படங்களை இயக்கியவர் இவர். இவரின் முதல் படமான புது வசந்தம் படத்தை ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்தார்.

இசையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்த 4 நண்பர்கள் ஒன்றாக ஒரு மாடி வீட்டில் குடியிருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் வருவார். அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பை அழகாக காட்டியிருந்தார் விக்ரமன். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

அதன்பின் பல படங்களை விக்ரமன் இயக்கியிருந்தாலும் பூவே உனக்காக, சூர்ய வம்சம், வானத்தை போல ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. பூவே உனக்காக திரைப்படம்தான் விஜயின் கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பின்னரே மற்ற இயக்குனர்கள் விஜயை வைத்து படம் இயக்க முன் வந்தார்கள்.


இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விக்ரம் ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பேசியிருக்கிறார். புது வசந்தம் தியேட்டரில் 4வது வாரம் ஓடிக்கொண்டிருந்த நேரம். ஒரு பத்திரிக்கைக்காக அவரை பேட்டி எடுக்க போனேன். அவரிடம் எப்படி பேச வேண்டும்? என்ன பேச வேண்டும்? என யோசித்துக்கொண்டே போனேன்.

‘என் பெயர் விக்ரமன். சமீபத்தில் வெளியான புது வசந்தம் படத்தின் இயக்குனர் நான்’ என சொல்லி என்னை அவரிடம் அறிமுகம் செய்ய நினைத்தேன். அவரின் வீட்டுக்கு போகும்போது அவர் எங்கேயோ வெளியே கிளம்பி கொண்டிருந்தார். காரில் ஏறுவதற்கு முன் என்னை பார்த்த ரஜினி என்னை நோக்கி வந்து ‘வாங்க விக்ரமன்’ என்றார்.

எனக்கு இன்ப அதிர்ச்சியாகிவிட்டது. அவர் எவ்வளவு பெரிய லெஜெண்ட்.. சூப்பர்ஸ்டார்.. எனது புகைப்படத்தை பேப்பரில் பார்த்துவிட்டு என்னை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார். என்னை வீட்டுக்குள் அழைத்து சென்று அவரின் மனைவி லதாவிடம் ‘இவர்தான் புது வசந்தம் படத்தின் இயக்குனர்’ என சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். நான் நெகிழ்ந்து போனேன். அவர் எளிமையின் உச்சம்’ என விக்ரம் சொல்லியிருக்கிறார்.

Next Story