நாளைய தீர்ப்பு படத்தில் முதலில் விஜய் இல்லை!. நான் நடிக்க வேண்டியது!. நடிகர் ஓப்பன்!...

Actor vijay: நடிகர் விஜய் இப்போது பெரிய நடிகராக இருந்தாலும் அவர் சினிமாவில் நடிக்க துவங்கி 4 வருடங்கள் அவருக்கு சரியாக அமையவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை விஜய் சொன்ன போது அவரின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஏற்கவில்லை. சினிமா உனக்கு செட் ஆகாது என்றார்.
ஆனால், விஜய் அடம்பிடிக்கவே நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் விஜயை அறிமுகம் செய்து வைத்தார். இந்த படம் வெளியான வருடம் 1992. அடுத்து வந்த ரசிகன் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருந்ததால் படம் ஓடியது. ஆனால், அதன்பின்னரும் விஜயை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ வரவில்லை. இதற்காக எஸ்.ஏ.சி பல முயற்சிகள் செய்தும் பலனில்லை.

பல நடிகர்களிடம் சென்று ‘என் மகனை உங்களுடன் நடிக்க வையுங்கள்’ எனக்கேட்டார். ஆனால் யாரும் ஆர்வம் காட்டவில்லை. விஜயகாந்த மட்டுமே சம்மதித்து செந்தூரப்பாண்டி பாடத்தில் நடித்து கொடுத்தார். அதன்பின் பூவே உனக்காக படம் விஜய்க்கு முக்கிய படமாக அமைந்து அவரின் கெரியர் டேக் ஆப் ஆனது. இப்போது விஜய் முக்கிய நடிகராக மாறியிருக்கிறார். இந்நிலையில், நடிகர் சரவணன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்திருக்கிறார்.

நாளைய தீர்ப்பு படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நான்தான். எஸ்.ஏ.சி என்னிடம் 50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார். அக்டோபர் மாதம் ஷூட்டிங் என சொன்னார். நானும் காத்திருந்தேன். அக்டோபர் மாதத்தில் அதிக அளவில் மழை பெய்தது. எஸ்.ஏ.சி என்னை கூப்பிடவே இல்லை. ஷூட்டிங் தள்ளிப்போகிறது என்று கூட சொல்லவில்லை. எனவே, அந்த மாதம் ஊர் சுற்றப் போய்விட்டேன்.
ஒருநாள் கூப்பிட்டு ஷூட்டிங் போகலாம் என்றார். அப்போது நான் வேறு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ‘உங்களுக்காக காத்திருந்தேன். நீங்கள் அழைக்கவில்லை’ என சொல்லிவிட்டேன். அந்த படத்தில்தன் விஜய் அறிமுகமானார்’ என சித்தப்பு சரவணன் சொல்லியிருக்கிறார்.