முரளி, விக்னேஷ் மட்டுமில்ல!. சேது படத்தில் நடிக்கவிருந்த அந்த நடிகர்!.. லிஸ்ட்டு பெருசா இருக்கே!..

by Rohini |   ( Updated:2025-02-26 15:30:32  )
murali
X

பாலா இயக்குனராக அறிமுகமான திரைப்படம் சேது. முதல் படமே தேசிய விருது. 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விக்ரம் அபிநயா ஆகியோர் லீடு ரோலில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு தான் விக்ரமுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இந்த படம் ஒரு பெரிய கம்பேக் என்று விக்ரமுக்கு சொல்லலாம். படத்தை பொறுத்த வரைக்கும் ஜாலியாக கல்லூரி வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் .

ஒரு அழகான மாணவியை பார்த்ததும் அவர் மீது காதல் வயப்படுகிறான். ஒரு கட்டத்திற்கு மேலாக அந்தப் பெண்ணின் மீது பைத்தியமாக காதலை வளர்க்கிறான். கடைசியில் பைத்தியக்காரனாக மாறுகிறான். இதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் வெளியாகி முதல் ஒரு வாரம் ரசிகர்களிடம் எந்த ஒரு ரெஸ்பான்ஸும் இல்லை. இந்த படத்திற்கு முன்பு வரை பல தோல்விகளையே பார்த்து வந்த விக்ரமுக்கு இந்தப் படமும் தோல்வியைத் தான் கொடுக்குமோ என்ற அச்சமும் இருந்தது.

ஆனால் அடுத்த இரண்டாவது வாரத்தில் இருந்து படம் சரியான பிக்கப் ஆகிவிட்டது. பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்து வந்தவர் தான் பாலா. தனது முதல் படமான சேது படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றார். இந்த நிலையில் சேது படத்தில் விக்ரமுக்கு முன்பு பல ஹீரோக்கள் இந்த படத்திற்குள் வந்து போயிருக்கின்றனர். அதில் விக்னேஷ் முரளி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் .

இதில் இன்னொரு அறியப்படாத விஷயம் என்னவெனில் நடிகர் செல்வா தான் இந்த படத்தின் முதல் ஹீரோ சாய்ஸ். இந்த படத்தின் கதையை செல்வாவிடம் சொன்னபோது மூன்று படங்களில் கால்ஷீட் கொடுத்து வைத்திருந்தாராம் செல்வா. அதனால் அந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு இதில் நடிக்கலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் இவரை வைத்து சீயான் சீயான் என்ற ஒரு பாடலையும் படமாக்கி இருக்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இவரை வைத்து எடுத்திருக்கிறார்கள்.

மொட்டை போட ரெடியாக இருந்திருக்கிறார் செல்வா. அதன் பிறகு படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் அவருக்கு கொடுக்கவே இல்லையாம். சரி அவ்வளவுதான் என நினைத்து கோல்மால் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம் செல்வா. அந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் அபிநயா. அவர் இன்னொரு படத்தின் சூட்டிங் இருக்கிறது நான் போகணும் என சொல்ல அப்போதுதான் செல்வாவிற்கு தெரிந்தது சேது படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.


செல்வாவிடம் சேது படத்தின் கதையை சொல்லி ஆறு வருடங்கள் கழித்து தான் விக்ரமை வைத்து அந்த படத்தை எடுத்திருக்கிறார் பாலா .முதலில் அகிலன் என்ற பெயரில் தான் செல்வாவை வைத்து அந்த படம் எடுப்பதாக இருந்ததாம் .அதன் பிறகு தான் விக்ரமை வைத்து சேது என படம் வெளியானது. இந்த படத்தில் செல்வா மட்டும் நடித்திருந்தால் இன்று சீயான் விக்ரம் என்ற ஒரு மகா நடிகனை நாம் இழந்திருப்போம்.

Next Story