நீங்க யார்னு எனக்கு தெரியாது!. அசிங்கப்படுத்திய விராட் கோலி!.. சிம்பு செய்த சம்பவம்....

STR Virat kohli: சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. எனவே, சினிமாவின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. அப்பா டி.ஆர். சகலகலா வல்லவன் என்பதால் அவரிடமிருந்தும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார். காதல் அழிவதில்லை படம் மூலம் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். அதன்பின் பல படங்களிலும் நடித்தார்.
சினிமாவில் நிறைய வெற்றி தோல்விகளை பார்த்திருக்கிறார் சிம்பு. சினிமாவில் மட்டுமில்லை. சொந்த வாழ்விலும் அவருக்கு சில காதல் தோல்விகள் இருந்திருக்கிறது. பள்ளி வயதிலேயே இவர் ஒரு பெரிய நடிகரின் மகளை காதலித்து அது பிரேக்கப் ஆனதாக சொல்லப்பட்டது. அதன்பின் வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவை காதலித்தார்.
ஆனால், அதுவும் பிரேக்கப் ஆனது. அதன்பின் மகா படத்தில் நடிக்கும்போது ஹன்சிகா மோத்வானியை காதலித்தார். அதுவும் பிரேக்கப் ஆகிவிட்டது. இப்படி சொந்த வாழ்வில் பலமுறை விழுந்து பின் எழுந்து வந்திருக்கிறார். தனக்கேற்ற ஒரு பெண் வருவார் என்கிற நம்பிக்கையில் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருக்கிறார்.

சினிமாவில் தோல்விகள் வந்தாலும் இடையில் ஹிட் படங்களை கொடுத்து தனது மார்கெட்டை தக்க வைத்துக்கொள்கிறார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் தான் ரசித்த பாடல் ‘நீ சிங்கம்தான்’ பாடல் என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அது சிம்பு நடித்து வெளியான 10 தல படத்தில் இடம் பெற்ற பாடல். இதை சிம்புவே டிவிட்டிரில் பகிர்ந்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சிம்பு ‘விராட் கோலிதான் அடுத்த சச்சின் என நான் கணித்தேன். அதுபோலவே அவர் தன்னை நிரூபித்து பிரபலமானார். ஒருநாள் அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சென்று ‘ஹாய் ஐ யம் சிம்பு’ என்றேன். அவரோ ‘நீங்க யார்னு தெரியவில்லை’ என சொல்லிவிட்டார்.
ஒருநாள் நான் யார் என உங்களுக்கு தெரிய வரும். அப்ப பாத்துக்கிறேன் என மனதில் நினைத்துக்கொண்டேன். அதுபோல சமீபத்தில் நான் நடித்த ‘நீ சிங்கம்தான்’ பாடலை அவர் பிடிக்கும்னு சொல்லி இருக்கிறார். இதுவே எனக்கு வெற்றிதான்’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.