எம்ஜிஆரோட வாழ்க்கையில இவ்வளவு துன்பங்களா? அடப்பாவமே..! சிவகுமார் புட்டு புட்டு வச்சிட்டாரே!

by Sankaran |   ( Updated:2025-02-23 16:30:55  )
mgr, sivakumar
X

எம்ஜிஆர் தனது ஆரம்ப காலகட்டத்தில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதுகுறித்து பிரபல நடிகர் சிவகுமார் என்ன சொல்றாருன்னு பாருங்க.

17 நாள் திரும்பிருக்காரு: எம்ஜிஆர் நீங்க நினைக்கிற மாதிரி சின்ன வயசுல சந்தோஷமா எல்லாம் இல்ல. அளவு கடந்த சோகம். காலையில 7 மணிக்கு மேக்கப் போட்டு இருப்பாரு. சாயங்காலம் 5 மணி வரைக்கும் கூப்பிடவே மாட்டாங்க. 'போய்ட்டு நாளைக்கு வாப்பா'ன்னு சொல்லிடுவாங்க. அப்படியே 17 நாள் திரும்பிருக்காரு. அப்படி வந்துக்கிட்டு இருந்தவருக்கிட்ட ஒருநாள் இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் நீ போலீஸ் வேடம்தான் போடப்போற. உங்கிட்ட சைக்கிள் இருக்கான்னு கேட்டுருக்காரு.

திருடன் திருடன்...: உடனே ஓடிப்போய் பக்கத்துல சைக்கிள்கடை கிட்ட நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கிட்டு வந்து நடிக்க வர்றாரு. உடனே ஒருத்தர் திருடன் திருடன்... என் சைக்கிளைத் திருடிட்டான்னு பின்னாடியே ஓடி வர்றாரு. அப்புறம் எம்ஜிஆர் 17 நாள் எனக்கு ஷாட் இல்ல. இப்ப தான் டைரக்டர் கூப்பிட்டுருக்காரு.

இந்த ஒரு ஷாட்ல மட்டும் நடிச்சிக்கிறேன். அப்புறம் உங்க சைக்கிளைத் தந்துடறேன்னு சொன்னாராம். அந்த சைக்கிளுக்கு சொந்தக்காரர் தான் டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு. பின்னாளில் அவரு இயக்கத்தில் எம்ஜிஆர் நடிச்ச படம் பெற்றால்தான் பிள்ளையா.

MGR டிரஸ்: எம்ஜிஆர் வாய்ப்பு தேடி வந்தபோது அவருக்கு 2 வேட்டி, 2 சட்டை. ஒரு பட்டாபட்டிதான். அவரு டிரஸ்சைத் துவைச்சிக் காயப்போடுவாரு. அந்தக் காலத்துல இஸ்திரி பெட்டி எல்லாம் அவருக்கிட்ட இல்ல. அதனால சொம்புல சுடுதண்ணீர் வச்சி அதைக் கொண்டு டிரஸ்சை தேய்ச்சிப் போட்டுக்கிட்டு வாய்ப்ப தேடி வருவாரு.

அப்போ ஒரு பஸ்ஸ்டாண்டுல ஐயா பசி வயிற்றைக்கிள்ளுது. 3 நாளாச்சுன்னு ஒரு குடும்பம் கேட்கும்போது தன்னிடம் பஸ்சுக்காக வச்சிருந்த 7 ரூபாய்ல 3 ரூபாயை அவங்களுக்குக் கொடுத்து பசியாற்றினார். இருக்கும்போது கொடுக்குறது பெரிய விஷயம் அல்ல. இல்லாதபோதும் கொடுக்குறதுதான் பெரிய விஷயம்.

அப்பவே எம்ஜிஆருக்குள்ள அந்தக் கொடை வள்ளல் குணம் இருந்துருக்கு. எம்ஜிஆருக்கு 2 சம்சாரம். முதல் சம்சாரம் 2 வருஷத்துல செத்துப் போயிடுச்சு. 19 வயசுல கல்யாணம் பண்ணினாரு. 2 வருஷத்துல பொண்டாட்டி செத்துப் போயிடுச்சு. சோறு போட முடியல. வசதியில்ல. இன்னொரு அம்மாவைக் கல்யாணம் பண்றாங்க.


எங்கவீட்டுப்பிள்ளை: 18 வயசுல டிபி நோயாளி. பொண்டாட்டியை சைக்கிள் ரிக்ஷாவுல உட்கார வச்சி மைலாப்பூர் ஆஸ்பத்திரி வரை 5 கிமீ. நடந்து போவாரு. அப்படி எல்லாம் போய் வைத்தியம் பார்த்தாரு. இப்படி எல்லாம் போராடி முதன் முதலா 54ல மலைக்கள்ளன் ஹிட்டாச்சு. அலிபாபா, மதுரை வீரன், எங்கவீட்டுப்பிள்ளை ஹிட்டாச்சு. நாடோடி மன்னன் சொந்தமா எடுத்து ஹிட்டாச்சு. அப்புறம் நாட்டையே பிடிச்சிட்டாரு. அதாவது வள்ளுவர் என்ன சொல்றாரு... 'அளவுகடந்த துன்பத்தைத் தாங்குறவன் ஒருநாள் உச்சம் தொடுவான்'.

முதல் அமைச்சர்: 'ஏன்டா கஷ்டம் வருது'ன்னு நினைக்காதீங்க. கடவுள் உன்னை சோதிக்கிறாருன்னா ஒருநாள் பெரிய ஆளா ஆக்குவாருன்னு அர்த்தம். எப்பவுமே தாமரைப்பூ மாதிரி வாழ முடியாது. துன்பம் ஜாஸ்தி வந்தா ஒரு சோதனை நம்ம பெரிய ஆளா வருவோம். அப்படி தொடர்ந்து துன்பத்தை சந்தித்து வந்த எம்ஜிஆர் நாட்டின் முதல் அமைச்சர் ஆகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story