நம்பி கொடுத்தேன்!.. அட்வான்ஸ் வாங்கிட்டு விஜய் ஏமாத்திட்டார்!.. புலம்பும் தயாரிப்பாளர்!..
Actor Vijay: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் விஜய். சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அப்பாவிடம் சொல்ல அவரோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பல நாட்கள் அடம்பிடித்து விஜய் அதில் உறுதியாக இருக்க அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரே தனது சொந்த காசை போட்டு படத்தை தயாரித்து ‘நாளைய தீர்ப்பு’ என்கிற படத்தில் விஜயை அறிமுகம் செய்து வைத்தார்.
விஜய் ரசிகன்: அந்த படம் ஓடவில்லை. கவர்ச்சி இருந்தால்தான் படம் ஓடும் என்பதை புரிந்துகொண்ட எஸ்.ஏ.சி அடுத்து ரசிகன் என்கிற படத்தை இயக்கி அதில் சங்கவியை களமிறக்கி கவர்ச்சி விருந்து வைத்தார். ஒரு காட்சியில் சங்கவின் அம்மா ஸ்ரீவித்யாவுக்கே முதுகில் சோப்பு போடும் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார் விஜய்.
எனவே, அந்த படம் ஹிட் அடித்தது. ஆனாலும், மற்ற தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விஜயை வைத்து படமெடுக்க முன்வரவில்லை. பலரிடமும் சென்று தன மகனுக்காக வாய்ப்பு கேட்டார் எஸ்.ஏ.சி. எல்லோரும் தயங்கினார்கள். சத்தியராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களிடம் சென்று என் மகனை உங்கள் தம்பியாக நடிக்க வையுங்கள் என்றெல்லாம் கேட்டார்.
விஜயகாந்த்: அது நடக்கவில்லை. அப்போதுதான் விஜயகாந்த் அவருக்கு உதவி செய்து செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார். அந்த படம்தான் விஜயை ‘சி’ செண்டர்களிலும் கொண்டு சேர்த்தது. அதன்பின் காதல் மற்றும் ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் விஜய்.
ஒருகட்டத்தில் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் நடிகராக விஜய் மாறி இவர்தான் சூப்பர்ஸ்டார் என சிலர் பேசும் அளவுக்கு முன்னேறினார். 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறிய நிலையில் அரசியலிலும் நுழைந்திருக்கிறார். அவர் அரசியலிலேயே நீடிப்பாரா இல்லை மீண்டும் சினிமாவுக்கு திரும்புவாரா என்பதை 2026 சட்டமன்ற தேர்தலே முடிவு செய்யும்.
விஜய்: இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சொந்த தயாரிப்பில் மட்டுமே நடித்து வந்த விஜய் முதன் முதலாக எங்களின் தயாரிப்பில் விஷ்ணு படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட் ஆனது. அதனால், மீண்டும் எங்களின் தயாரிப்பில் ஒரு படத்தில் விஜய் நடிப்பதாக பேசப்பட்டு அவருக்கு ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்தோம். பணத்தை வாங்கிக்கொண்டு விஜய் படத்தில் நடிக்கவே இல்லை. 9 வருடங்களுக்கு பின் அந்த ஒரு லட்சத்தை திருப்பி கொடுத்தார்’ என சொல்லியிருக்கிறார்.