ஒரே வருடத்தில் 2 வித்தியாசமான படங்களில் கலக்கிய ஹீரோக்கள்!.. இறங்கி அடித்த அஜித்!...

by MURUGAN |
actors
X

actors

பொதுவாக பல நடிகர்கள் ஒரே ஸ்டைலில் படம் நடிப்பார்கள். இந்த நடிகர் படமென்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற இமேஜும் உருவாகும். ரஜினியெல்லாம் அப்படித்தான். இவரின் படங்கள் என்றாலே மாஸான காட்சிகள், பன்ச் வசனங்கள், சண்டை காட்சிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அவரின் ரசிகர்களும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள்.

அதே நேரம் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி சில நடிகர்கள் நடிப்பார்கள். அப்படி ஒரே வருடத்தில் வித்தியாசம் காட்டி 2 படங்களில் நடித்த நடிகர்கள் பற்றி இங்கு பார்ப்போம். நடிகர் சூர்யா கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தில் உதவி கமிஷனராக அசத்தலாக நடித்திருப்பார். இந்த படம் 2003 ஆகஸ்டு மாதம் வெளியானது. இந்த படத்திற்கு பின் முற்றிலும் வேறுபட்டு பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2003 அக்டோபர் மாதம் வெளியானது.

நடிகர் விஜய் ஷங்கரின் இயக்கத்தில் நடித்த நண்பன் படம் 2002ம் வருடம் ஜனவரியில் வெளியானது. இந்த படத்தில் அமைதியான கல்லூரி மாணவனாக நடித்திருந்தார் விஜய். சண்டை காட்சி இல்லாத ஒரே விஜய் படம் இது மட்டுமே. அதே வருடம் நவம்பர் மாதம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் பக்கா ஆக்‌ஷன் படமாக வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.


கவுதம் மேனன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்த திரைப்படம் என்னை அறிந்தால். 2015 பிப்ரவரியில் வெளியான இந்த படத்தில் அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதே வரும் நவம்பரில் வெளியானது வேதாளம். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் அஜித் பக்கா ரவுடியாகவும், வில்லன்களை பழிவாங்குபவராகவும் நடித்திருந்தார்.

கமலை பொறுத்தவரை அவர் இதுபோல பல படங்களில் நடித்திருக்கிறார். உதாரணத்திற்கு சொல்ல வந்தால் அவரே கதை எழுதி தயாரித்து இயக்கி நடித்த விருமாண்டி படம் 2004ம் வருடம் ஜனவரி மாதம் வெளியானது. அதே வரும் ஆகஸ்டு மாதம் சரணின் இயக்கத்தில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் வெளியானது.

ரஜினியை பொறுத்தவரை சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்த பாட்ஷா படம் 1995ம் ஜனவரியில் வெளியானது. அதே வருடம் அக்டோபர் மாதம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து படம் வெளியானது. பாட்ஷாவில் இருந்தது போல மாஸான காட்சிகள் இதில் ஒன்று கூட இருக்காது.

Next Story