பாரதிராஜா செஞ்ச வேலையால் கடுப்பான நடிகையின் அம்மா.. அப்புறம் நடந்ததுதான் சம்பவம்

இயக்குனர் இமயம்: 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. கிராமத்து பின்னணியில் அமைந்த படங்களை இயக்கி அந்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்து ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராகவே மாறினார் .காலத்தால் அழியாத ஒரு கலைஞனாக இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் பாரதிராஜா.
தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் என பன்முக திறமை கொண்ட ஒரு கலைஞனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். அவர் இயக்கும் எல்லா படங்களிலும் பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் என்ற தன்னுடைய குரல் மூலமாகத்தான் அந்த படத்தையே ஆரம்பிப்பார். முதன் முதலில் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தில் தான் ஒரு முழு நீள நடிகராக நடித்தார்.
அண்ணன் தங்கை பாசம்: அதன்பிறகு ஆயுத எழுத்து, பாண்டியநாடு, எங்க வீட்டுப் பிள்ளை, குரங்கு பொம்மை போன்ற பல திரைப்படங்களில் நடித்து அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார். வெப்சீரிசிலும் இவர் கால் பதித்திருக்கிறார். இயக்குனர் இமயம் என புகழப்படுகிறார். இவருடைய படைப்புகளில் காலத்தால் அழியாத படைப்பாக இருப்பது கிழக்குச் சீமையிலே திரைப்படம்.
பாசமலர் படத்திற்கு பிறகு அண்ணன் தங்கை பாசத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது தான் இந்த கிழக்குச் சீமையிலே திரைப்படம் .விஜயகுமார் ராதிகா நெப்போலியன் இவர்களையும் தாண்டி ஆத்தங்கர மரமே என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அஸ்வினி. அவர் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் கம்பேக் கொடுக்கும் அஸ்வினி: திருமணம் குழந்தைகள் என கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி ஆகிறார் அஸ்வினி .இந்த நிலையில் கிழக்குச் சீமையிலே படத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆத்தங்கரை மரமே என்ற பாடலில் வெள்ளை தாவணி பாவாடை அணிந்தவாறு அருவியில் குளித்துக் கொண்டிருப்பது போல காட்சி இருக்கும் .
அவருக்கு ஏற்கனவே வீசிங் பிரச்சனை வேற இருந்ததாம். தண்ணீரில் அதிக நேரம் இருந்தால் வீசிங் வந்துவிடுமாம். அதனால் அந்த பாடலை படமாக்கும் பொழுது அவருக்கு வீசிங் வந்துவிட்டதாம். ஆனால் பாரதிராஜா அதைக் கண்டு கொள்ளவே இல்லையாம். உடனே அஸ்வினியின் அம்மா நேராக நீ முதல்ல எழுந்திரு, நீ ஒன்னும் நடிக்கவே வேண்டாம் என அழைத்துக் கொண்டு போய்விட்டாராம்.
இது பாரதிராஜாவிற்கு கோபத்தை வரவழைத்து இருக்கிறது. உடனே பேக்கப் என சொல்லிவிட்டு பாரதிராஜா சென்றுவிட்டாராம். அதன் பிறகு அவரை சமாளிப்பது மிகவும் கஷ்டமாகிவிட்டது. ஆனால் அந்த பாடல் படமாக்கும் பொழுது பாரதிராஜாவின் அம்மா தவறிவிட்டார். அவர் இறந்து போய் சில நாட்களில் இந்த பாடல் கட்சியை படமாக்கினார் பாரதிராஜா. அதனால் தான் அந்த ஒரு அப்செட்டில் இருந்தார். அதனால் கூட என்னை அவர் கவனிக்க வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் என் அம்மா என்னுடைய நிலைமையை அறிந்து அந்த மாதிரி நடந்து கொண்டார் என அஸ்வினி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.