எம்ஜிஆர் முன்ஜென்மத்துல என்னவா பிறந்தார் தெரியுமா? கைரேகை பார்த்து சொன்ன பானுமதி

by Rohini |
banumathi
X

கொடை வள்ளல்:பிரபல திரை ஆய்வாளரும் மூத்த பத்திரிக்கையாளருமான வாமன் எம்ஜிஆர் பற்றி பல விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். எம்ஜிஆர் ஒரு பெரிய கொடை வள்ளல் என அனைவருக்கும் தெரியும். பாத்திரம் அறிந்து கொடு என்பதற்கிணங்க யாருக்கு கொடுக்க வேண்டும்? கொடுக்கக் கூடாது என பார்த்து செய்தவர் எம்ஜிஆர். ஆனால் அரசியலில் நிறைய பேருக்கு கொடை வழங்கினார். அமைச்சர் பொறுப்புகளை வழங்கினார். ஆனால் அதில் பெரும்பாலானோர் கள்ளச்சாராய அழுக்கில் மூழ்கிக் கிடந்தனர். அது வேற விஷயம். அரசியல் வேணாம் என வாமன் கூறினார்.

சாதாரணமாக பாடல் அமையாது: பெரும்பாலான எம்ஜிஆர் படங்களில் அமைந்த பாடல்கள் அவரை உயர்த்தி பாடும் மாதிரியே அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு காரணமும் எம்ஜிஆர்தான். தான் எப்படி இருக்க வேண்டும்? எப்படி தன்னை மக்கள் அறிய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர். ஒரு ஆங்கில பாடலை மையப்படுத்திதான் நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடல் வெளியானது என வாமன் கூறியிருக்கிறார்.

கைரேகையை பார்த்து சொன்ன பானுமதி: அதுவும் சந்தேகத்தில் கூறியது போலத்தான் வாலி எழுதியிருப்பார். நான் ஆணையிடுவேன். அது நடக்கும் என்றெல்லாம் எழுதாமல் வருங்காலத்தில் இப்படியெல்லாம் மாறும் என்பதை போல எழுதியிருந்தார். ஏன் எம்ஜிஆர் கை ரேகையை அலிபாவும் 40 திருடர்களும் படத்தின் போது பானுமதி பார்த்திருக்கிறார். பார்த்த மாத்திரத்தில் ஒரு நாள் எம்ஜிஆர் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார்.

அவருக்கான இடம் காத்திருக்கிறது என்றெல்லாம் கூறினாராம். முற்காலத்தில் எம்ஜிஆர் ஒரு பெரிய மகாராஜா குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம். செல்வந்தராக இளவரசராக இருந்திருக்கலாம் என்று அவர் ஜாதகம் சொல்வதாக ஒரு பேச்சு இருந்திருக்கிறது. ஆனால் பானுமதி சொன்னதை போல ஒரு கட்டத்தில் தமிழக மக்களை கட்டி ஆண்டார் எம்ஜிஆர். அவருக்காக எத்தனை ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள்.


ஒரு மிகப்பெரிய ஆளுமையாக பார்க்கப்பட்டார். சாதி மதம் பேதம் பார்க்காமல் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் கட்டியணைத்து தன் முத்த மழையை பொழிந்தார் எம்ஜிஆர். குறிப்பாக வயதான தாய்மார்களை தன் தாய்க்கு நிகராக பார்த்தவர் எம்ஜிஆர். இப்போது பல வீடுகளில் எம்ஜிஆரை ஒரு தெய்வமாக போற்றி வணங்கி வருகின்றனர்.

Next Story